Femi9 நிகழ்வில் பந்தா காட்டிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா... இந்த திமிரு ஆகாதுப்பா!
Nayanthara: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு மட்டும் பிரச்னை எங்கிருந்துதான் வருகிறது என தெரியவில்லை. ஆனால் அவர்கள் செய்வதற்கு தொடர்ச்சியாக வம்பில் மாட்டிக்கொண்டே இருக்கின்றனர். தற்போது ஒரு புது நிகழ்வும் நடந்துள்ளது.
பிரபலங்கள் சிலர் அவ்வப்போது பிரச்னையில் சிக்கி கொள்வார்கள். ஆனால் நயனுக்கு சமீபத்தில் நடப்பது எல்லாமே பிரச்னையாக அமைந்துள்ளது. நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தவருக்கு கடைசியாக வெளியான எல்லா படமுமே பெரிய அளவு பிளாப்.
இதனால் நடிப்பு ஒரு பக்கம் விட்டு தற்போது தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். Skin9 மற்றும் Femi9 என இரண்டு பிராண்டுகளை அறிமுகம் செய்து நடத்தி வருகிறார். கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த பிராடக்ட்களின் ஒராண்டு வெற்றிவிழா சமீபத்தில் நடத்தப்பட்டது.
ஆனால், அந்த நிகழ்வே இப்போ அம்மணிக்கு பிரச்னையை உருவாக்கி இருக்கிறது. பொருட்களை அதிக விற்பனை செய்த டிஸ்டிபியூட்டர்களை கவுரவிக்கவே இந்த விழா நடத்தப்பட்டது. ஆனால் இதில் அதிகளவிலான இன்ஸ்டா கிரியேட்டர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
காலையில் 9 மணிக்கு வர வேண்டிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆறு மணி நேரம் கழித்தே வந்தனராம். அப்போது நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ரொம்ப தாமதாகமாகவே முடிக்கவும் பட்டதாம். இது ஒரு புறமிருக்க கடைசியில் கிரியேட்டர்களுடன் நயன் போட்டோ எடுக்க இருந்தாராம்.
அருகில் இருந்த கணவர் விக்னேஷ் சிவன் வந்த கிரியேட்டர்களிடம் நக்கலாகவே என்ன போட்டோ தானே எடுக்கணும் என திமிர்த்தனம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. தற்போது சினிமாவில் உச்சத்தில் இல்லாத போதே நயனின் அடாவடி ஓவராக இருக்கிறது. மீண்டும் இவர் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கினால் அவ்வளவுதான் எனவும் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.