எங்க அண்ணன்தான்டா இனிமே!.. குட் பேட் அக்லி லுக்கில் அஜித்!. வைரலாகும் செம பிக்!...
குட் பேட் அக்லி பட படப்பிடிப்பில் அஜித் ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் வெளியகியுள்ளது.
Good Bad Ugly: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த படம் 70 சதவீதம் முடிந்த போதே 'குட் பேட் அக்லி' எனும் படத்தில் நடிக்க துவங்கினார் அஜித். அதற்கு காரணம் பல காரணங்களால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
எனவேதான், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போனார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலுமே திரிஷாவே கதாநாயகியாக நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்னும் எடுக்க வேண்டியிருக்கும் நிலையில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வெனிஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி படத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒரு பாடல் காட்சியையும் வெனிஸ் நகரத்திலேயே எடுத்துக்கொள்ளலாம் என அஜித் சொல்லிவிட்டாராம். அஜித் வெனிஸ் நகரத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. விரைவில் அவர் ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
வெனிஸ் நகரத்தில் இருந்தால் பயிற்சியும் எடுக்கலாம். ரேஸில் கலந்துகொள்ளவும் சுலபமாக இருக்கும் என அவர் நினைக்கிறார். அஜித்துடன் அவரின் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்கும் இருக்கிறார்கள். நேற்று கூட வெனிஸ் நகர சாலைகளில் அஜித்துடன் நடந்து கொண்டே ஷாலினி எடுத்த செல்பி வீடியோ இணையத்தில் வைரலானது.
அதேபோல், மகன் ஆத்விக்குடன் ஷாலி எடுத்த செல்பி வீடியோவும் வெளியானது. ஒருபக்கம், கையில் டாட்டூ குத்தியபடி வெள்ளை நிற டீசர்ட் மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்து அஜித் நிற்கும் புகைப்படம் ஒன்று ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தின் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.
வழக்கம்போல் கோட் ஷுட் அணிந்து பாதி வெள்ளை முடி பாதி கருப்பு முடி என அஜித் ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது. இதைப்பார்க்கும் போது அஜித் கேங் லீடராக நடிப்பார் என நம்பப்படுகிறது.