கெட் ரெடி ஃபார் குட் பேட் அக்லி!.. டாட்டு லுக்கில் அசல் தலயாக மாறிய அஜித்!. வைரல் போட்டோ!
அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ajithkumar: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்தவர். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர். இப்போது மாஸ் நடிகராக மாறியிருக்கிறார். விஜயை போலவே இவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இத்தனைக்கும் பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்தவர்தான் அஜித். இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தை பொறுத்தவரை ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது.
விரைவில் வெனிஸ் நாட்டுக்கு செல்லவிருக்கிறது படக்குழு. ஒருபக்கம், ஏற்கனவே வெனிஸ் நகரத்தில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விடாமுயற்சியை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் திரிஷாவே கதாநாயகியாக நடித்து வருகிறார்.
குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர் மார்க் ஆண்டனி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த படத்தில் இரண்டு டான்களுக்கு இடையேயுள்ள ஈகோவை காட்டியிருந்தார். கெட் பேட் அக்லி பட போஸ்டர்களை பார்த்தபோது இந்த படமும் கேங்ஸ்டர் கதைதான் என நம்பப்படுகிறது.
பில்லா, அமர்க்களம், அட்டகாசம், அசல், வேதாளம் படங்களை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் அஜித் கேங்ஸ்டராகவே நடித்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், இதை உறுதி செய்யும் வகையில் இரண்டு கைகளிலும் டாட்டூ அணிந்தபடி அஜித் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.
அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இன்று காலை வெனிஸ் நகரில் மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ வெளியான நிலையில், தற்போது இந்த புகைப்படம் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.