அட்லீயின் பிரம்மாண்ட படைப்பா? டாப் தமிழ் ஹீரோவுடன் அல்லு அர்ஜூன்…

By :  Akhilan
Update:2025-03-03 11:41 IST

Atlee: இயக்குனர் அட்லீயின் அடுத்த திரைப்படம் குறித்த ஆச்சரிய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜயை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கியவர் அட்லீ. அப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்ததாலும், ரசிகர்களிடம் இது பழைய திரைப்படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்ட கதை என்ற விமர்சனமும் எழுந்தது.

இருந்தும் அட்லீயின் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாமல் தான் சென்று கொண்டிருக்கிறது. பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். அப்படம் வெளியாவதற்கு முன்னர் பல விதங்களில் கலாய்க்கப்பட்டார்.

ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பாலிவுட்டில் அதிக வருமானம் கொடுத்த முக்கிய படங்களில் ஜவானும் இடம்பெற்றது. தற்போது அட்லீயின் அடுத்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ச்சியாக கசிந்து வருகிறது.

 

முதலில் அட்லீ பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது சல்மான் கான் அப்படத்திலிருந்து விலகி இருக்கிறாராம். இதனால் இயக்குனர் அட்லீ தன்னுடைய அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனை இயக்க இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் இப்படத்தில் இன்னொரு முக்கிய ஹீரோவும் இணைய இருக்கிறாராம். அவர் கோலிவுட் நாயகராக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்காக அட்லீக்கு 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் இப்படத்தை 600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறதாம். வரலாற்று திரைப்படமாக இது உருவாக இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்க இருக்கும் நிலையில் அட்லீ படத்தின் ப்ரீ புரோடக்‌ஷனை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளார்.

இப்படத்தில் மூன்று முக்கிய நாயகிகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்விகபூர் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News