கோவாவில் ரகசிய தீவில் கீர்த்தி சுரேஷ் திருமணம்!.. 1000 பவுனா?.. கொளுத்தி போட்ட பயில்வான்..!
கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து சினிமா விமர்சகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி கொடுத்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், விக்ரம், சூர்யா, ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார்.
குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க அங்கும் டாப் நடிகையாக வலம் வந்தார். அதிலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குறைய தெலுங்கில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு அங்கும் சறுக்கல் தான். இதனால் பாலிவுட்டுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் நடிகர் வருண் தவான் உடன் இணைந்து பேபி ஜான் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருந்தது. அவர் தனது கல்லூரி காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவர் ஒரு தொழிலதிபர் என்றும் கூறி வந்தார்கள்.
இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதியான இன்று கோவாவில் 2 குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்தது. ஆண்டனி கிறிஸ்தவராக இருக்கும் நிலையில் இந்து முறைப்படி கீர்த்தியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தார் ஆண்டனி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கின்றார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மார்க்கெட் குறைந்து விட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது.
அப்படியே கிடைத்தாலும் தங்கை, அண்ணி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே முடியும். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பில்லாத காரணத்தினால் பாலிவுட்டில் கவர்ச்சி காட்டினார் கீர்த்தி சுரேஷ். அதுவும் சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை. தனது கைவசம் இரண்டு படங்கள் மட்டுமே வைத்திருக்கின்றார். அந்த படங்களும் சிக்கலில் இருக்கின்றது.
கோவாவில் உள்ள ரகசிய தீவில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார் கீர்த்தி சுரேஷ். நடிகர் விஜய் தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று இருக்கின்றது. மேலும் அவரது கணவர் ஆண்டனி தட்டில் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இனிமேல் தான் அவர் யார் சினிமாவை சேர்ந்தவரா? அல்லது தொழிலதிபரா? என்பது தெரியவரும் என்று கூறி இருக்கின்றார்.