ஒரே ‘ஜிகிடு’ வைப்தான்! கூலி டீம் கொடுத்த பெஸ்ட் பிறந்த நாள் கிஃப்ட்.. என்னம்மா ஆடுறாரு தலைவரு?
ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் பிறந்தநாள் என்றாலே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விடும். அந்த வகையில் இந்த வருடமும் அவருடைய பிறந்த நாளின் போது அவர் நடிக்க இருக்கும் ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களின் அப்டேட் கண்டிப்பாக வெளியாகும் என சொல்லப்பட்டது.
கிட்டத்தட்ட 20 நாளுக்கு முன்பாகவே இது சம்பந்தமான செய்திகள் வெளியாகி கொண்டு வந்தன. இந்த நிலையில் இன்று அவருடைய 74 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவர் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லையே என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தார்கள்,இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் மாலை 6 மணிக்கு அப்டேட் இருக்கிறது என ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.
அவர் சொன்னதைப் போல மாலை கூலி திரைப்படத்திலிருந்து ஒரு பாடலின் சின்ன கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ஜிகிடு ஜிகிடு என மியூஸிக் மட்டுமே ஒலிக்கும் அந்த பாடலில் ரஜினி மாஸாக ஸ்டைலாக ஆடியிருக்கிறார். இது கூலி திரைப்படத்திலிருந்து ரஜினியின் பிறந்த நாளுக்கான கிஃப்ட் என லோகேஷ் இந்த வீடியோவை பகிர்ந்து வாழ்த்தையும் சொல்லியிருக்கிறார்.
இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன் மனசிலாயோ பாடல் பெருமளவு ரீச்சானதை தொடர்ந்து அந்த வரிசையில் இந்த ஜிகிடு பாடலும் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று தெரிகிறது. மேலும் முத்து படத்தில் ரஜினி துண்டை சுற்றி ஸ்டைல் காட்டுவார்.
அதை போல் இந்த பாடலிலும் லோகேஷ் ரஜினியை அந்த ஸ்டைலை பயன்படுத்த வைத்திருக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரஜினி அனிருத் காம்போ என்றாலே அது கண்டிப்பாக ஹிட்டுதான்.
இதோ அந்த வீடியோ: