கூலி படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வைரலாகும் ரஜினியின் வீடியோ
ரஜினி:
ரஜினியின் 74 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்த நாளை விழா எடுத்து ஆங்காங்கே கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ரஜினியும் பிறந்தநாள் என்றால் ஒரு சில ரசிகர்கள் அதிகாலையில் இருந்து அவரது வீட்டின் முன் கூடி விடுவார்கள், வீட்டில் அவர் இருக்கும் பட்சத்தில் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து செல்பி எடுத்துக் கொள்வது வழக்கம்,
ஆனால் இந்த வருடம் ரஜினி கூலி திரைப்படத்திற்காக ஜெய்ப்பூரில் இருக்கிறார். அதனால் அங்கு தனது கூலி திரைப்பட டீமுடன் சேர்ந்து தனது 74ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் ரஜினி .அது சம்பந்தமான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. ரஜினியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் கூலி.
கூலி திரைப்படம்:
இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே லோகேஷன் சினிமா கிராஃபை எடுத்துக் கொண்டால் அவருடைய படங்கள் எப்படிப்பட்ட திரைக்கதையை உள்ளடக்கியதாக இருக்கும் என நம்மால் ஊகிக்க முடியும். அந்த வரிசையில் ரஜினியை வைத்து ஒரு மாசான கேங்ஸ்டர் திரைப்படத்தை தான் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்கள் இணைந்து இருக்கின்றனர். நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் என ஒவ்வொரு மொழி சினிமாக்களிலும் இருக்கும் டாப் ஹீரோக்கள் இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர். இதுவே படத்தின் ஹைப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக ஆயிரம் கோடியை வசூலிக்கும் எனவும் ஒரு சில பேர் கூறி வருகிறார்கள்.
அதற்கான முயற்சியில் தான் படக்குழு தனது வேலையை துரிதப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஹிந்தியில் எப்படியாவது அதிக வசூலை குவிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அமீர் கானை இந்த படத்திற்குள் வரவழைத்து இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது .
பொன்விழா ஆண்டு:
74 வயதை நிறைவு செய்யும் ரஜினி அடுத்த வருடம் தனது 50 வது பொன்விழா ஆண்டை நெருங்குகிறார். அதனால் ஒட்டுமொத்த சினிமா திரையுலகமும் அவருக்காக ஒரு பெரிய விழா எடுத்து அவரை கௌரவப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DDenfG8vwZI/?igsh=c2NoYzd1dXBxazVo