வீட்டுக்கே போறதில்ல!.. இளம் நடிகைக்கு டார்ச்சர்.. சீனு ராமசாமி விவாகரத்தின் பின்னணி..!
இயக்குனர் சீனு ராமசாமி விவாகரத்துக்கு காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார்.
இயக்குனர் சீனு ராமசாமி:
தமிழ் சினிமா கூடல் நகர் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இந்த படத்தை தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றார். இவர்களை கடைசியாக கோழிப்பண்ணை செல்லத்துரை என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
பிரபல இயக்குனராக இருக்கும் சீனு ராமசாமி நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் மனைவியை பிரிந்து வாழப் போவதாக அறிவித்திருந்தார். நானும், எனது மனைவியும் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்பத்துடன் விவாகரத்து பெற்று அவரவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்தப் பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எந்தெந்த விதத்தில் சேராது என்று கூறியிருந்தார்.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி:
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இயக்குனர் சீனு ராமசாமி விவாகரத்து குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'சீனு ராமசாமி சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
சினிமாவை தாண்டி பல புத்தகங்களை எழுதி இருக்கின்றார். அடிப்படையில் இவர் ஒரு எழுத்தாளர். அதனை சினிமாவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இயக்குனராக மாறினார். இவர் தர்ஷனா என்பவரை திருமணம் செய்து கொண்டு 17 வருடம் ஒன்றாக இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். திடீரென்று எந்தவித கிசுகிசுகளும் ஏற்படாமலேயே விவாகரத்தை அறிவித்திருக்கின்றார்.
இருவரின் விருப்பத்தின் பெயரில் இல்லற வாழ்க்கையில் இருந்து விடுபடுகிறோம் என்று கூறியிருக்கின்றார். இவர் மீது எந்த ஒரு புகாரும் இதுவரை வந்ததே கிடையாது. சினிமாவில் தனக்கான வேலையை மிகச் சிறப்பாக செய்யக்கூடிய ஒரு மனிதர். சமீப நாட்களாக அவர் ப்ரொடக்ஷன் ஆபீஸ்லயே தங்கி விடுவதாக தகவல் வெளியாகி வந்தது .
சரியாக வீட்டிற்கு செல்வதில்லை என்று கூறப்பட்டுள்ளது. பல வருடத்திற்கு முன்பு ஒரு நடிகை இவர் மீது பாலில் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். 2013 ஆம் ஆண்டு இடம் பொருள் ஏவல் என்கின்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அப்படத்தில் நடித்திருந்த மனிஷா யாதவை சீனு ராமசாமி பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாக புகார் எழுந்தது.
ஆனால் அவரிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. பொத்தாம் பொதுவாக சீனு ராமசாமி மீது பாலியல் புகாரை வைத்தார் மனிஷா. அந்த சமயத்தில் இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சினிமாக்காரர்களை பற்றி ஹவுஸ் வைஃப் ஆக இருக்கும் மனைவிகளுக்கு எதுவும் தெரியாது. அவருக்கும் பாடி டிமாண்ட் உண்டு, தொழில் வலிகள் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை.
சில நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு வரும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இதுபோன்று தொடர்ந்து நடக்கும்போது மனைவியை கணவன் சரியாக கவனித்துக் கொள்ளாத சூழல் ஏற்படுகின்றது. ஆனால் இதை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து போனால் இது போன்ற முடிவுகள் வராமல் இருக்கும்' என்று அந்த பேட்டியில் கூறி இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன்,