கலைஞர், ஜெயலலிதாவை எதிர்த்து பேசி வாழ முடியுமா? விஜயகாந்த் கொடுத்த தரமான பதில்

By :  Rohini
Update: 2024-12-22 15:30 GMT
vijayakanth

விஜயகாந்த்:

விஜயகாந்த் நம்மை விட்டு மறைந்தாலும் அவரைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டே வருகின்றன. ஒருவர் இருக்கும் வரை அவருடைய அருமை தெரியாது. அவர் போன பிறகு தான் அருமை தெரியும் என சொல்வார்கள். அது விஜயகாந்து விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது. அவர் இருக்கும் வரை சினிமாவை விட அரசியலில் மக்கள் அவரை பற்றி புரிந்து கொள்ளவே இல்லை.

அப்படி புரிந்து கொண்டிருந்தால் இந்நேரம் இந்த நாட்டின் தலைவராகி இருப்பார் விஜயகாந்த். மக்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்று தன் வாழ்நாள் வரைக்கும் நினைத்துக் கொண்டிருந்தவர் கேப்டன். ஊழலை ஒழிக்க வேண்டும், மதுவை ஒழிக்க வேண்டும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என பல நல்ல விஷயங்களை மக்களுக்காக கொண்டு வர வேண்டும் என நினைத்தார்.

தயாரிப்பாளர்களின் நடிகன்:

ஆனால் அரசியலில் அவரால் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. எத்தனையோ பேருக்கு ஏராளமான உதவிகளை செய்தவர் விஜயகாந்த். தயாரிப்பாளர்கள் எந்த வகையிலும் கஷ்டப்படக் கூடாது என்பதை எப்பொழுதுமே அவர் தன் நினைவில் வைத்திருப்பார். அவரால் ஒரு முறை கூட தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் என்பது வந்ததே கிடையாது. அப்படியே வந்தாலும் தன்னுடைய பணத்தை போட்டு அந்த படத்தை எடுத்து முடித்து விடுவார் விஜயகாந்த்.

சினிமாவில் இருக்கும் எந்த பிரபலங்களை கேட்டாலும் ஏதாவது ஒரு வகையில் விஜயகாந்துடன் ஒரு நல்ல அனுபவங்களை கொண்டிருப்பார்கள். இது விஜயகாந்த் செய்தது ,விஜயகாந்தால் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன், விஜயகாந்த் இல்லை என்றால் என் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது போல அவரால் பலனடைந்தவர்கள் ஏராளமான பேர் இருக்கின்றனர்.

மீசை ராஜேந்திரன் சொன்ன விஷயம்:

அந்த வகையில் மீசை ராஜேந்திரனும் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். மீசை ராஜேந்திரன் ஒரு தீவிர விஜயகாந்த் ரசிகர் என்பது அனைவருக்குமே தெரியும். பல படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கிறார். அரசியலிலும் தன் பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஒருமுறை விஜயகாந்தை பார்க்க மீசை ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகள் ஆகிய இருவரும் போனார்களாம்.

அப்போது விஜயகாந்த் மீசை ராஜேந்திரனின் மகளுக்கு ஒரு ஃபாரின் சாக்லேட் பாக்ஸ் .அதன் மதிப்பு 7000 இருக்குமாம். அதை அப்படியே தூக்கி கொடுத்தாராம். அந்த நேரம் என் மகள் விஜயகாந்திடம் என்னுடைய அப்பா கலைஞர் பற்றியும் ஜெயலலிதாவை பற்றியும் கடுமையாக விமர்சித்து மேடைகளில் பேசி வருகிறார். அதனால் எங்களுக்கு பயமாக இருக்கிறது.


 அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என எங்களுக்கு பயமாக இருக்கிறது எனக் கூறினாராம். அதற்கு விஜயகாந்த் கவலப்படாதம்மா உங்க அப்பாவுக்கு ஒன்றும் ஆகாமல் நான் பார்த்துக்கிறேன். நான் இருக்கிற வரைக்கும் உன் அப்பாவுக்கு ஒரு கெட்டதும் நடக்க விடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினாராம் விஜய்காந்த். இதை சொல்லும் போது மீசை ராஜேந்திரன் அப்படியே அழுதுவிட்டார்.

Tags:    

Similar News