நான் அந்த கேள்வியை கமல் சார்கிட்ட கேட்டிருக்க கூடாது.. வருத்தப்படும் பகவதி
kamal
கமல் தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவின் தலைமகன் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சினிமாவில் அவருக்கு தெரியாத எதுவுமே இல்லை. எல்லா துறைகளிலும் அவருடைய பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது. ஆனால் இன்னும் நான் கற்றுக் கொள்வது நிறையவே இருக்கிறது என்றுதான் அவர் அடிக்கடி கூறுவது வழக்கம்.
தற்போது கூட ஏஐ தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அது படிப்பது மிக கடினம். அது மிக மிக பெரியது என்றும் கூறியிருந்தார் கமல். தற்போது அவர் நடிப்பில் தக் லைப் திரைப்படம் உருவாகி இருக்கிறது .இந்த படம் ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது .மணிரத்னம் கமல் காம்போவில் நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு 30 வருடங்கள் கழித்து இந்த படத்தின் மூலம் மறுபடியும் இணைந்து இருக்கின்றனர்.
அதனால் அந்த ஒரு ஹைப் படத்திற்கு இருக்கிறது. படத்தை புரோமோஷன் செய்வதற்காக பல ஊர்களுக்கு சென்று வருகிறார்கள் படக்குழு. அப்போது கமல் பேசும் பொழுது அப்போது இருந்த மணிரத்னம் வேறு. இப்போது இருக்கும் மணிரத்னம் வேறு எனக் கூறியிருந்தார். படத்தில் கமலுடன் திரிஷா சிம்பு அசோக் செல்வன் ஐஸ்வர்யா லட்சுமி அபிராமி பகவதி பெருமாள் ஜோஜூ ஜார்ஜ் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இதில் பகவதி பெருமாள் கமலை பற்றி கூறும் போது ஒரு விஷயத்தை பகிர்ந்தார். கமல் சாருக்கும் எனக்கும் ஒரு ஷாட் எடுக்க வேண்டியது இருந்தது. அதற்காக ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதாவது ஒரு காரில் டிரைவர் சீட்டில் கமலும் பின் இருக்கையில் நானும் அமர்ந்த மாதிரி உட்கார்ந்து இருந்தோம். அப்போது லைட் செட்டிங் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் நான் அந்த கேள்வியை கேட்டிருக்கக் கூடாது. இருந்தாலும் ராஜ பார்வையில் என நான் ஆரம்பித்ததும் உடனே கழுத்தை திரும்பி ராஜ பார்வையில் என்ன என கேட்டார். நான் உடனே ராஜபார்வை படத்திலிருந்து உங்களுடைய பிலிமோகிராபி மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றது. ஏகப்பட்ட கேரக்டர்கள் நடித்து விட்டீர்கள். வித்தியாசமான கதாபாத்திரங்கள் .இதற்கெல்லாம் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்ற ஒரு கேள்வியை கேட்டேன்.
thug life
அதற்கு கமல் யாராக இருக்கும் சிவாஜி சார் தான் என கூறினார். அதிலிருந்து தொடர்ந்து ஒரு 15 நிமிடங்கள் பேசிக்கொண்டே இருந்தார். அதுவும் கழுத்தை திரும்பிய படியே என்னை பார்த்து பேசிக்கொண்டே இருந்தார். இதுவே எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. இதுவே அந்த இடத்தில் நான் இருந்து வேறு ஒரு நபர் என்னுடைய இடத்தில் இருந்தால் முன்னாடி வாப்பா. கழுத்து வலிக்குது என சொல்லி இருப்பேன். ஆனால் கமல் சார் அப்படி இல்லை .அந்த ஒரு சம்பவத்திற்கு பிறகு ஏன் இந்த கேள்வியை கேட்டோம் என்ற ஒரு வருத்தம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது என பகவதி பெருமாள் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.