ச்சீ.. ச்சீ.. ச்சீ.. பிரா போட்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்தது பிக் பாஸ் விக்ரமனா?.. என்ன நடந்தது

பிரா போட்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்த பிக் பாஸ் விக்ரமன் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.;

By :  Saranya
Update:2025-03-09 19:58 IST

பிக் பாஸ் விக்ரமன் பெண்கள் அணியும் உள்ளாடையை அணிந்து கொண்டு இரவு நேரத்தில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் சுற்றி தெரியும் காட்சி வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகளை பிக் பாஸ் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

இயக்குனர் ராஜு முருகனின் மனைவியும் முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளினியான ஹேமா சின்ஹாவுக்கு சமீபத்தில் குடியிருப்பில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிக் பாஸ் விக்ரமன் தான் அப்படி செய்ததாகவும் சர்ச்சைகள் வெடித்துள்ளன.



சோசியல் மீடியாவில் மட்டுமின்றி சில செய்தி தொலைக்காட்சிகளிலும் விக்ரமன் பிரா அணிந்து கொண்டு பெண் வேடுமிட்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்தார் என்று பரபரப்பை கிளப்பியுள்ளனர். அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், அது ஒரு படப்பிடிப்புக் காட்சி உண்மையான தகவல் தெரியாமல் சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன என விக்ரமன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் அதனை உடனடியாக அவர் நீக்கிய நிலையில், மேலும், சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இது சினிமா சூட்டிங் அல்லது உண்மையாகவே விக்ரமன் தப்பு செய்துவிட்டாரா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். சீக்கிரமே இதற்கான தெளிவான விளக்கம் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே இலங்கை பெண்ணை காதலித்து விக்ரமன் ஏமாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பின. அவருக்கு திருமாவளவன் ஆதரவு கொடுத்தார்.


அதன் பின்னர், ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட விக்ரமன் அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் விக்ரமன் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த சீசனில் கடைசியில் அசீம் டைட்டிலை வென்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News