அட்லிக்கு கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம்!. பங்கமா கலாய்த்த புளூசட்ட மாறன்...

By :  MURUGAN
Update: 2025-05-21 08:44 GMT

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவர் அட்லி. குருவைப் போலவே இவரும் அதிக பட்ஜெட் படங்களை இயக்கி தயாரிப்பாளர்களை கதறவிடுவார். இவர் இயக்கிய படங்கள் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்காமல், அவர் தெருவுக்கு வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கெத்தாக காலரை தூக்கிவிட்டு பேட்டி கொடுத்து கொண்டிருப்பார் அட்லி.

ஒருபக்கம், தமிழில் ஏற்கனவே ஹிட் அடித்த படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி பட்டி டிங்கரிங் செய்து தனது ஸ்டைலில் இயக்குகிறார் என்கிற புகார் இவர் மீது இருக்கிறது. இவர் முதலில் இயக்கிய ராஜா ராணி படமே மணிரத்னத்தின் மௌன ராகம் படத்தின் உல்டாதான். அதேபோல், விஜயகாந்தின் சத்ரியனை உல்டா செய்து தெறி படம் எடுத்தார்.

கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை பட்டி டிங்கரிங் செய்து மெர்சல் படம் எடுத்தார். ஷாருக்கானின் சக் தே படத்தை கொஞ்சம் மாற்றி பிகில் எடுத்தார். நிறைய சினிமா பார்த்தவர்களுக்கு அட்லி எங்கிருந்து சுட்டார் என்பது நன்றாகவே தெரியும். ஆனால், இந்த குற்றச்சாட்டை அட்லி ஏற்றுக்கொள்வது இல்லை.


எந்த படமென்றாலும் அதில் மற்றொரு படத்தின் சாயல் இருக்கும். என்னை குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் மேலே மேலே போவேன் என சொல்கிறார் அட்லி. பிகில் படத்திற்கு பின் பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அந்த படம் 1300 கோடி வசூலை பெற்றது.

இப்போது புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், அட்லிக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. ஜூன் 14ம் தேதி அட்லிக்கு இந்த பட்டம் கொடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் இந்த செய்தியை பகிர்ந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு திரைப்படங்களின் முக்கியமான காட்சிகளை ஆராய்ச்சி செய்து தன் படங்களுக்கு சிகிச்சை தந்து பிழைக்க வைத்த டாக்டர்’ என நக்கலடித்திருக்கிறார்.

Tags:    

Similar News