சத்யராஜை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த புளூசட்டை மாறன்... நடந்தது இதுதான்!

By :  Sankaran
Published On 2025-07-29 06:34 IST   |   Updated On 2025-07-29 06:34:00 IST

தயாரிப்பாளரும், இயக்குனருமான வேலுபிரபாகரன் கடவுள் மறுப்பாளர். இவர் படங்களில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சிறந்த நாத்திகவாதி. தனது படங்களில் புரட்சிகரமான கருத்துக்களைச் சொல்வார். ஆனால் அவர் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் கடவுள். சிவன், புரட்சிக்காரன் என்றும் படங்களை இயக்கினார். இவற்றில் கடவுள், காதல் கதை படங்கள் வரவேற்பைப் பெற்றன.

இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் நாளைய மனிதன். சூப்பர்ஹிட். அதிசயமனிதன், அசுரன், ராஜாளி, உத்தமராசா, பிக்பாக்கெட் ஆகிய படங்களையும் இவர்தான் இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு சத்யராஜ் நடித்த வெப்பன் படத்தை இயக்கினார். உடல்நிலை சரியில்லாமல் தனது 68வது வயதில் 18.7.2025ல் காலமானார்.

அதன்பிறகு அவருடைய நினைவாக நடந்த விழாவில் பிரபல யூடியூபர் புளூசட்டைமாறன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் சத்யராஜூம் பங்கேற்றார். புளூசட்டைமாறன் ஜாலியாகப் பேசினார். அவர் கடவுள் மறுப்பாளர். அதனால் ஒரு கூட்டத்தில் உட்கார்ந்து அவர் பேசிக் கொண்டு இருந்தாராம். அப்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், அவருக்கும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டு இருந்ததாம்.


கடைசியாக புளூசட்டைமாறன் ஒரு பாயிண்டைக் கையில் எடுத்தாராம். 'நான் கடவுள் இல்லை. கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டு விதையை மண்ணுல விதைக்கிறேன். நீங்க கடவுள் உண்டு கடவுள் உண்டுன்னு சொல்லிக்கிட்டு விதையை பாறையில விதைங்க. எது வளருதுன்னு பார்ப்போம்'னு சொன்னாராம்.

உடனே அந்தக் கூட்டத்துல இருந்து எழுந்த ஒருவன் 'நீ பாறையில விதையேன் பார்ப்போம்'னு சொன்னானாம். அடடா இவ்ளோ நேரமும் இந்தக் கூட்டத்திலயா வந்து பேசிக்கிட்டு இருக்கோம்னு அப்ப தான் எனக்கு தோணுச்சு என்கிறார் புளூசட்டைமாறன். அதைக் கேட்ட சத்யராஜ் விழுந்து விழுந்து சிரித்தார்.

Tags:    

Similar News