அஜித்திடம் இப்படி ஒரு மாற்றமா? வாய்ப்பே இல்லையே? உண்மையில் என்னதான் நடக்குது?
ajith
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் பேக் அக்லி. இந்தப் படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபிஸிலும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக்குடன் தான் இணைவார் என அரசல் புரசலாக செய்திகள் வெளியானது. ஆனால் அவருடைய லிஸ்ட்டில் ஏகப்பட்ட இயக்குனர்கள் இருந்தாலும் ஆதிக்தான் அஜித்தின் சாய்ஸாகவும் இருந்தது.
தற்போது அஜித் கார் ரேஸில் தீவிரமாக இருப்பதால் எல்லாம் முடிந்து செப்டம்பரில் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும். ஆரம்பத்தில் குட் பேட் அக்லி டீம் தான் மீண்டும் இணைகிறார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் ஆதிக்கிற்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் ஆதிக் அஜித் இணையும் திரைப்படத்தை மைத்ரி மூவி தயாரிக்காது என்றும் தகவல்கள் வெளியானது.
இன்னொரு பக்கம் யாருமே இந்தப் படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்றால் தன் மாமனரான பிரபுவையே இந்தப் படத்தை எடுக்க சொல்லலாம் என்றும் ஆதிக் நினைத்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் கடைசியில் இந்தப் படத்தை வினியோகஸ்தர் ராகுல்தான் தயாரிக்கிறாராம். அஜித் படம் என்றால் அவருடைய சம்பளம் சேர்த்து மொத்த பட்ஜெட் 300 கோடியை தொட்டு விடும்.
ஒரு சாதாரண வினியோகஸ்தரால் எப்படி 300 கோடி பட்ஜெட் போட்டு படம் எடுக்க முடியும் என்ற வகையிலும் பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இதில்தான் சின்ன டிவிஸ்டே இருக்கிறது. இந்தப் படத்தின் தியேட்டரிக்கல் உரிமையை மட்டும் ராகுல் எடுக்கிறாராம். மற்ற சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை அஜித் வாங்கலாம் என்று ராகுல் சொன்னதாக தெரிகிறது.
இதற்கு அஜித்தும் சம்மதித்தாகவே தெரிகிறது. இதுதான் பெரிய ஆச்சரியம். ஆக டிஜிட்டல் , சாட்டிலைட் உரிமைகளை விற்று அவருடைய சம்பளத்தை அஜித் எடுப்பார் என்பதுதான் இதில் சொல்லப்படும் விஷயம். ஆனால் இதுவரை அஜித் இப்படி செய்ததே கிடையாதே? அப்படி இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதெல்லாம் சும்மாதான். 300 கோடி போட்டு ராகுல் படம் எடுக்கிறார் என்று தெரிந்தால் பல கேள்விகள் எழலாம். அதனால் இந்த பிரச்சினை எல்லாம் வரக்கூடாது என்பதற்காக கூட ராகுல் இந்த மாதிரி சொல்லியிருக்கலாம் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது.