கர்வம் பிடித்த நடிகை.. சாவித்திரி சொன்ன அந்த 80ஸ் நடிகை யார் தெரியுமா?

By :  Rohini
Published On 2025-07-29 17:59 IST   |   Updated On 2025-07-29 17:59:00 IST

savithri

பழம்பெரும் நடிகை சாவித்ரி நடிகையர் திலகமாக போற்றப்பட்டார். குடும்ப உணர்வுகளை மனதில் ஏற்றி அதை அப்படியே நடிப்பாக வெளிப்படுத்துவதில் மிகச்சிறந்த நடிகை சாவித்ரி. பாசமலர் படத்தில் சிவாஜிக்கு தங்கையாக சாவித்ரி நடிக்க அதிலிருந்து இருவரும் ஜோடியாக படங்களில் நடிக்கவே இல்லை. அந்தளவுக்கு பாசமலர் திரைப்படம் அனைவருக்கும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அப்போதைய காலகட்டத்தில் அனைவராலும் திமிரு பிடித்த நடிகை, மிகவும் கர்வம் கொண்ட நடிகை என பார்க்கப்பட்டவர் நடிகை பானுமதி.ஆனால் பானுமதியே பழகி நட்பாக பேசிய ஒரு நடிகையை சாவித்ரி மிகவும் கர்வம் பிடித்த நடிகை என்று கூறியிருக்கிறார். அதுதான் ஆச்சரியம். அவர் வேறு யாருமில்லை. நடிகை ஜெயசித்ரா. சொந்தங்கள் வாழ்க என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நிருபர் ஜெயசித்ராவை சந்தித்து சில கேள்விகளை கேட்டிருக்கிறார்.

அந்த கேள்வி பதில்தான் இப்போது வைரலாகி வருகின்றன. அதில் நீங்கள் கர்வம் பிடித்தவர் என சாவித்ரி குற்றம் சாட்டியிருக்கிறாரே என்று நிருபர் கேட்க ஜெயசித்ரா சொன்ன பதில் இதோ. சாவித்ரி ஒரு பழம்பெரும் நடிகை.அவர் என்னை ஏன் இப்படி பேசினார் என்று தெரியவில்லை. நான் யாரிடமும் மரியாதையாகத்தான் நடந்து கொள்வேன். டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதன் படிதான் கேட்பேன்.

ஒரு முறை பானுமதி என்னை வரவழைத்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். நான் கர்வம் பிடித்தவள் என்றால் அவர் அப்படி செய்வாரா? என ஜெயசித்ரா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சிவக்குமாரும் அவரும் காதலிப்பதாக அப்போது செய்திகள் வெளியானது. அதையும் ஜெயசித்ரா மறுத்திருக்கிறார். சிவக்குமாரும் நானும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம்.

jayachithra

அதனால் கூட அப்படி தெரிய வாய்ப்பிருக்கலாம் என்று கூறினார். சிவக்குமார் உங்களை காதலித்தாரா என்ற கேள்விக்கு அதை என்னால் எப்படி சொல்ல முடியும்? எனக்கு எப்படி தெரியும் என பதில் அளித்திருக்கிறார். 

Tags:    

Similar News