nick name-ஆ வைக்கிறீங்க? ‘கிங்டம்’ விழாவில் அக்கட தேசத்தை அலற விட்ட அனிருத்

By :  Rohini
Published On 2025-07-29 14:07 IST   |   Updated On 2025-07-29 14:07:00 IST

aniruth

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கிங்டம். கௌதம் தின்னனுரி என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ நடித்துள்ளார். படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்றுதான் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது விஜய்தேவரகொண்டா நடிகர் சூர்யாவுக்கு நன்றி கூறினார்.

ஏனெனில் இந்தப் படம் ஒரு பேன் இந்தியா படமாக தயாராகியிருப்பதால் அனைத்து மொழிகளிலும் இருக்கும் டாப் ஸ்டார்களின் வாய்ஸில்தான் கிங்டம் படத்தின் டீஸர் வெளியாஅ வேண்டும் என படத்தின் இயக்குனர் விருப்பப்பட்டாரம். அந்த வகையில் தமிழில் கிங்டம் படத்தின் டீஸரை சூர்யா வாய்ஸில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கூறியிருக்கிறார்.

ஆனால் இப்படி ஃபேவர் கேட்பது விஜய் தேவரகொண்டாவுக்கு பிடிக்காதாம். இருந்தாலும் சந்தேகத்தின் பேரில்தான் சூர்யாவுக்கு போன் செய்து ‘அண்ணா எனக்காக ஒன்று செய்ய வேண்டும். ஆனால் நோ சொல்ல கூடாது’ என கூறியிருக்கிறார். அதற்கு சூர்யாவும் சொல்லுங்க என கூற விஷயத்தை கூறியிருக்கிறார் விஜய்தேவரகொண்டா. எந்தவித மறுப்பும் இன்றி விஜய்தேவரகொண்டாவுக்காக வாய்ஸ் கொடுக்க சம்மதித்தாராம் சூர்யா.

அதே போல் அனிருத்தும் அந்த விழாவில் பல விஷயங்களை பகிர்ந்தார். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி கிட்டத்தட்ட 13 வருடங்களாக இந்த சினிமாவில் டிராவல் செய்து வருகிறேன்.அப்போதிலிருந்தே தெலுங்கு தேசத்திலிருந்து எனக்கான அன்பு பெருகிக் கொண்டேதான் இருக்கிறது. உங்களில் ஒருவராக என்னை மாற்றி விட்டீர்கள்.எப்பொழுதுமே நான் உங்கள் அனிருத் தான்.

aniruth

அதே போல் உங்கள் ‘பக்கோடு’தான் என கூறினார். இதில் பக்கோடு என்றால் ஒல்லிக் குச்சி. ஏனெனில் தெலுங்கு ரசிகர்கள் அனிருத்தை ஒல்லிக் குச்சி என்ற பெயர் வைத்துதான் கூப்பிடுகிறார்களாம். அதை அவர்கள் கிண்டலாக சொன்னாலும் அதையும் மேடையில் எந்தவொரு தயக்கமும் இன்றி அன்பாக வெளிப்படுத்தினார் அனிருத்.

Tags:    

Similar News