சுமால் சூப்பர்ஸ்டார் சூரி... ரசிகர்களின் கோமாளித்தனம்... பொளந்து கட்டிய புளூசட்டைமாறன்
நடிகர் சூரியின் மாமன் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. சூரி கதாசிரியராகவும் இந்தப் படத்தில் உருவெடுத்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். படம் முழுவதும் சென்டிமென்டால் ரசிகர்களைக் கதற விட்டுவிட்டார்களாம். சூரியின் நடிப்பு மட்டும் வழக்கம்போல அபாரமாக உள்ளது.
மற்றபடி திரைக்கதை சொதப்பல். படம் ரொம்ப ஸ்லோவாகப் போகிறது என்றும் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றும் விமர்சனம் வருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் ரிலீஸ் ஆனதையொட்டி மதுரையில் ஒரு ஆச்சரியம் தரும் சம்பவம் நடந்துள்ளது. அது என்னன்னு பாருங்க.
இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் இருந்தனர். அதனால் சூரி ரசிகர்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்று மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களைப் போன்று சூரியின் ரசிகர்களும் மண் சோறு சாப்பிட்டு நூதன முறையில் வழிபாடு செய்தது பெரிய ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதைப் பார்த்துவிட்டு பிரபல சினிமா விமர்சகரும், யூடியூபருமான புளூசட்டை மாறன் சுமால் சூப்பர்ஸ்டார் சூரி என்று பட்டமே கொடுத்து விட்டார்.
அதிலும் 'தலீவரின் வழியில் ரசிகர்களை வழிநடத்தும் சுமால் சூப்பர்ஸ்டார் சூரி' என்று இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார் புளூசட்டை மாறன். அதுமட்டும் அல்லாமல் இந்தக் கோமாளித்தனங்களை எல்லாம் சூரி நிறுத்தச் சொல்லி உடனே முடிவெடுக்க வேண்டும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்படத்துடன் இன்று வெளியான சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் சூப்பராக உள்ளதாம். படம் காமெடியில் பட்டையக் கிளப்புகிறதாம். அதிலும் செகண்ட் ஆஃப் கேட்கவே வேண்டாம். அவ்ளோ காமெடி என்கிறார்கள். அதனால் சூரியை சந்தானம் ஓவர் டேக் செய்துள்ளார் என்றே சொல்லலாம்.