சிவக்குமார் ஒன்னும் செத்துப் போயிட மாட்டான்! டி.ஆருடன் இப்படியொரு கசப்பான சம்பவமா?

By :  ROHINI
Published On 2025-07-02 12:04 IST   |   Updated On 2025-07-02 12:04:00 IST

tr

தமிழ் சினிமாவில் ஒரு பன்முக கலைஞராக திகழ்ந்து வருபவர் டி ராஜேந்தர். இசையமைப்பாளராக பாடல் ஆசிரியராக தயாரிப்பாளராக கதை ஆசிரியராக என இவர் இயக்கிய படங்களுக்கு இவர் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களை இயக்கி அதில் இசையும் அமைத்து இருக்கிறார் டி ராஜேந்தர். அது மட்டுமல்ல படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். திரைப்படங்களில் வித்தியாசமான கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களுக்காக இவர் மிகவும் பாப்புலர் ஆனவர். 80கள் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நபராக இருந்தார் டி ராஜேந்தர்.

அவர் இயக்கிய பல திரைப்படங்கள் காதல் திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. அதுவும் ஒருதலை காதலை மையப்படுத்தி இவருடைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக அண்ணன் தங்கை பாசத்தை இவருடைய எல்லா படங்களிலும் நாம் பார்க்க முடியும். சினிமாவில் கொடிகட்டி பறந்த டி ராஜேந்தர் அதன் பிறகு அரசியலுக்கு காலடி எடுத்து வைத்தார்.

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார் டி ராஜேந்தர் .சென்னை பூங்கரநகர் தொகுதியில் போட்டியிட்டு அதில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு திமுகவிலிருந்து விலகி தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்துள்ளார். தனித்துவமான நடிப்பு இசை பாடல் வசனங்களுக்காக மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற கலைஞராக இருந்திருக்கிறார் டி ராஜேந்தர். அவருடைய திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் காதலியை தொடாமல் நடிப்பது மாதிரி தான் ஹீரோவின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும் .

அதுபோல அவர் ஹீரோவாக நடித்த படங்களிலும் எந்த ஒரு நடிகையையும் தொட்டு பேசி அவர் நடித்ததே கிடையாது. அந்த அளவுக்கு ஒரு கண்ணியமான நடிகரும் கூட .இப்படிப்பட்ட டி ராஜேந்தரனுடன் தனக்கு பல கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கின்றன என சிவக்குமார் கூறியிருக்கிறார். டி ராஜேந்தரை பற்றி அவர் கூறும் பொழுது கே. கோபாலகிருஷ்ணனுக்கு பிறகு ஸ்கிரிப்ட் கையில் எடுக்காமல் படங்களை இயக்குவதில் சிறந்த ஒரு இயக்குனர் டி ராஜேந்தர் .அந்த வகையில் அவர் மீது எனக்கு நல்ல ஒரு மரியாதை இருக்கிறது.

ஆனால் அவர் படம் ஆரம்பிக்கும் போது நீங்க தான் ஹீரோ என சொன்னார். அதன் பிறகு படம் முடிவதற்குள் தந்தைக்க்கோர் கீதம் படத்தில் அவருக்கு புகழ் வந்த பிறகு அவருடைய கேரக்டரை தூக்கி வைத்தும் என்னுடைய கேரக்டரை டம்மியாக வைத்தும் எடுத்து விட்டார். ஹீரோவுக்கான ரோல் இடைவேளைக்கு அப்புறம் வருகிற மாதிரி அமைந்துவிட்டது. அந்த அளவுக்கு கதையை மாற்றி விட்டார். எனக்கு ரசிகர்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கிடையாது. படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது.

sivakumar

அப்போது ஒரு பெண் ரசிகை என்னிடம் வந்து அழுது கொண்டே கூறினார். அதாவது நீங்கள் ஹீரோவாக இருந்தாலும் உங்களுடைய கேரக்டர் இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறது என அழுது கொண்டே கூறினார் .அப்போது சிவக்குமார் ஒன்னும் செத்து விட மாட்டான். தைரியமாக இரு என அதை எல்லாம் தாண்டி வந்து விட்டேன். இந்த மாதிரி சில கசப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது .ஆனால் அவர் ஒரு பெரிய மேதை. அவரே கதை வசனம் எழுதுவார். டைரக்ட் பண்ணுவார். மியூசிக் போடுவார் நடிப்பார் எல்லாவற்றிலும் தனிப்பட்ட முறையில் அவர் ஒரு மேதை தான் என சிவக்குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News