அவரே வரலையா?.. ஷூட்டிங்கை உடனே கேன்சல் பண்ணுங்க… டைரக்டரிடம் சொன்ன ரஜினி!..

By :  AKHILAN
Published On 2025-05-27 16:46 IST   |   Updated On 2025-05-27 16:57:00 IST

Rajinikanth: ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பதற்கு எல்லா பெரிய பிரபலங்களுமே விருப்பம் தெரிவிப்பதற்கு அவரின் அந்த கவனிப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வளர்ந்து விட்டாலும் இன்றளவும் தன்னுடைய சக நடிகர்களுக்கு மரியாதை கொடுப்பதில் என்றுமே குறைவில்லாமல் இருப்பார். அவருடன் பணியாற்ற எந்த பெரிய பிரபலமும் தயங்கியதே இல்லை.

ஆரம்ப காலத்தில் நிறைய நடிகர்களுடன் இணைந்து நடித்த ரஜினிகாந்த் எப்போதுமே தன்னால் முடிந்த உதவியை விட்டு கொடுத்து செய்தும் வருவார். அந்த வகையில் இடையில் பல வருடங்களாக அவருடைய படத்தில் மிகப்பெரிய பிரபலங்கள் யாரும் இல்லாமல் இருந்தனர்.

ஆனால் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் இது மாறி இருக்கிறது. தற்போது உருவாகி வரும் கூலி மற்றும் ஜெயிலர்2 படத்தின் ஷூட்டிங்கில் மற்ற மொழி சூப்பர்ஸ்டார்கள் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயிலர்2ல் மோகன்லால், சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா என பலரும் நடித்து வருகின்றனர்.

அது போல கூலி படத்திலும் ஷொபீன் ஷாபீர், நாகர்ஜூனா, சத்யராஜ், அமீர்கான் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் வேட்டையன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். 

 

குறைந்த நாட்கள் ஷூட்டிங் என்றாலும் இருவருக்குமே ஒரு நல்ல நட்பு இருந்ததாம். படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போது அமிதாப் பச்சன் கையில் செய்த அறுவை சிகிச்சையால் கேன்சல் செய்து விட்டார். அந்த விஷயம் கேள்விப்பட்ட ரஜினிகாந்தும் உடனே ஷூட்டிங்கையே நிறுத்த சொன்னார்.

இதையறிந்த அமிதாப் பச்சன் ஒருநாள் மட்டும் எனக்கு அனுமதி கொடுங்க எனக் கூறி உடனே அடுத்த நாள் ஷூட்டிங் வந்து இருக்கிறார். வலியால் துடித்து கொண்டிருந்தாலும் ஸ்டார்ட் சொன்னவுடன் அப்படியே மாறி விடுவார். நடித்து முடித்து கட் சொன்னவுடன் தான் வலியை காட்டிக் கொள்வார்.

ரஜினிகாந்த் அவரிடம் இவ்வளவு வலியுடன் ஏன் கஷ்டப்படுகிறீர்கள் வீட்டில் இருக்கலாமே எனக் கேட்டதற்கு வீட்டில் இருந்தால் இன்னும் துடிப்பேன் என்றாராம். அப்படி ஒரு நல்ல நண்பர்களாகவே வேட்டையனில் இருந்து இருந்ததாக இயக்குனர் டிஜே ஞானவேல் தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News