எங்கள பாத்தா எப்டி தெரியுது... சந்திரமுகி பிரச்னைக்கு நயன் தரப்பு ஆதாரத்துடன் கொடுத்த விளக்கம்
நயன்தாரா திருமண டாக்குமெண்ட்ரியில் புதிய வதந்தி
Nayanthara: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண டாக்குமெண்டரியில் சந்திரமுகி பட காட்சிகளை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக பரவிய வதந்திக்கு தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகை நயன்தாரா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சரிவை சந்தித்து வருகிறார். இதனால் தொடர்ச்சியாக பிசினஸில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார். அதன் பொருட்டு தன்னுடைய திருமண வீடியோவையும் பிரபல நிறுவனமான நெட்பிளிக்சில் விற்பனை செய்திருந்தார். அதில் பல கோடிகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக பேச்சுகள் இருந்தது.
ஆனால் டாக்குமெண்டரி இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்தது. கடந்தாண்டு நயனின் பிறந்தநாளில் டாக்குமெண்டரி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரிலீஸ் நெருங்க நயன் தனுஷை கடுமையாக தாக்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
அதில் தானும் கணவர் விக்னேஷ் சிவனும் இணைவதற்கு காரணமாக நானும் ரவுடிதான் படத்தின் காட்சி மற்றும் இசையை பயன்படுத்த வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் அனுமதி கொடுக்கவில்லை என அப்பட்டமாக குற்றம் சாட்டி இருந்தார்.
அதை தொடர்ந்து திருமண டாக்குமெண்டரியில் கூட அந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதை தொடர்ந்து, தனுஷ் தரப்பு அவர் மீது வழக்கு தொடர்ந்து அதற்கு உரிய விளக்கம் கொடுக்குமாறு நீதிமன்றத்தில் இருந்து நோட்டீசும் வெளியிடப்பட்டது.
அது ஒரு புறமிருக்க, நடிகை நயன் சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்தவும் அனுமதி வாங்கவில்லை என்றும், அதற்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நயன் தரப்பு நயன்தாரா திருமண டாக்குமெண்ட்ரியில் சந்திரமுகி காட்சிகளை உரிய அனுமதி பெற்ற பின்னர் தான் பயன்படுத்தியதாக ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து இதுவும் வதந்தி தான் என விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.