ஆட்டோகிராப் படத்தை ஏஐ-ல பார்க்கணுமா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையா! வெளியான சூப்பர் அப்டேட்

By :  Akhilan
Update:2025-02-19 20:00 IST

Autograph: தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படமான ஆட்டோகிராப் குறித்து வெளியாகி இருக்கும் அறிவிப்பால் ரசிகர்கள் செம குஷியாகி இருக்கின்றனர்.

தமிழில் சமீப காலமாக வெற்றி படங்களை மீண்டும் ரிலீஸ் செய்யும் விஷயம் வாடிக்கையாக மாறியிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான தனுஷின் 3, விஜய் நடிப்பில் வெளியான கிள்ளி உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் திரையரங்குகளில் செய்யப்பட்டது.

புதிய படங்களின் வெளியீட்டை விட இத்திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டில் டாப் 10 வசூல் செய்த படங்களின் லிஸ்டில் கூட இப்படங்கள் இடம் பெற்று இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இந்த டிரெண்ட்டை விடக்கூடாது என முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் பல முன்னணி வெற்றி படங்கள் ரீ ரிலீஸ் செய்யும் திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் வெற்றி திரைப்படமான சச்சின் 20 ஆண்டு வெற்றி கொண்டாட்டமாக இந்த ஆண்டு விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெற்றி படமாக இருக்கும் ஆட்டோகிராப் திரைப்படமும் தற்போது ரி-ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த அறிவிப்பு வீடியோ முழுவதும் ஏஐ மூலம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மொத்த படமும் ஏஐயாக வெளியேறுமா அல்லது எப்போதும் போல சாதாரண என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் திரையரங்குகளுக்கு வந்தால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

முக்கிய நடிகர்களுக்கு எல்லாம் இயக்குனர் சேரன் ஆட்டோகிராப் படத்தின் கதையை சொல்ல அவர்கள் நடிக்க முடியாமல் போய் சேரனே படத்தில் இயக்கி நடித்தார். பிரபல நடிகைகள் கோபிகா, சினேகா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருந்தனர். காதல் கதையில் புதிய பரிணாமம் கொடுத்து இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடம் வெற்றி பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News