ஆல்ரெடி 1000 கோடி வசூலை அள்ளிய கூலி பட நடிகர்களின் படங்கள்!.. செம அப்டேட்!....
Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம்தான் கூலி. லோகேஷும், ரஜினியும் முதன் முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் லோகேஷ் இதற்கு முன் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம்,லியோ போன்ற படங்கள் ரசிகர்களிடம் பேசப்பட்டது.
கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அதோடு, ஹிந்தி நடிகர் அமீர்கானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது போல இந்த படத்தில் அமீர்கான் வேடமும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, இந்த படத்தில் சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இதுவரை எந்த தமிழ் படமும் 1000 கோடி வசூல் செயய்வில்லை. அப்படி செய்ய வேண்டுமெனில் பாகுபலி, பாகுபலி2, கேஜிப், புஷ்பா, புஷ்பா2 போல தமிழில் ஒரு பேன் இண்டியா படத்தை எடுக்க வேண்டும்.
அதில் மற்ற மொழி நடிகர்களும் நடிக்க வேண்டும். சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். அப்படம் 650 கோடி வசூல் செய்தது. 1000 கோடிக்கும் இன்னும் 350 கோடிதான் பாக்கி. தற்போது கூலி படம் அதை செய்யும் என நம்பப்படுகிறது. ஏனெனில் இப்படம் ரிலீஸுக்கு முன்பே 500 கோடி வியாபாரத்தை தொட்டிருக்கிறது.
இந்நிலையில், கூலி படத்தில் நடித்த நடிகர்களின் முந்தைய படங்கள் 1000 கோடி வசூலை தொட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ரஜினியின் ஜெயிலர் 650 கோடி, நாகார்ஜுனவின் குபேரா 120 கோடி, அமீர்கானின் Sitaare Zameen Par 220 கோடி, உபேந்திராவின் U1 50 கோடி என மொத்த வசூலை சேர்த்தால் 1000 கோடியை தாண்டுகிறது. எல்லா நடிகர்களின் படங்களும் சேர்ந்து 1000 கோடி என்றாலும் தற்போது இவர்கள் எல்லோரும் நடித்திருக்கும் கூலி என்கிற ஒரே படம் 1000 கோடி வசூலை தாண்டும் என திரையுலகம் நம்பிக்கொண்டிருக்கிறது.