அவர்தான் ஹீரோ.. அவர் இல்லாம எப்படி? கூலி இசை வெளியீட்டு விழாவில் இப்படி ஒரு சிக்கலா?
coolie
லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படம் கூலி. படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கின்றது. படத்தில் ரஜினியுடன் இணைந்து அமீர் கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா என எண்ணற்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர், நீண்ட நாளுக்கு பிறகு ரஜினியும் சத்யராஜும் இந்த படத்தில் இணைந்திருப்பது ஒரு கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்ஜுனா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. சுருதிஹாசனுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆக மொத்தம் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. படத்திற்கு இசை அனிருத். வழக்கம் போல ரஜினியின் படம் என்றால் அவர் மியூசிக்கில் தூள் கிளப்பி விடுவார். அதுமட்டுமல்ல பிஜிஎம் ரஜினி படத்திற்கு என ஸ்பெஷல் ஆகவே இருக்கும்.
அப்படித்தான் இந்த படத்தில் அமைந்த சிக்கிடு பாடலும் ஒட்டுமொத்த ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் பெற்றிருக்கிறது. அந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்து கொடுத்துள்ளார். இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. அதனால் படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது .
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மாதம் 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தலாம் என திட்டமிட்டு இருக்கிறார்களாம் .ஆனால் 26 ஆம் தேதி தான் அனிருத்தின் இசை கச்சேரி சென்னையில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. உலகளாவிய இசை கச்சேரியை நடத்தி விட்டு அதன் நிறைவு பகுதியை சென்னையில் நடத்த அனிருத் திட்டமிட்டு இருக்கிறாராம்.
அதனால் அவர் இல்லாமல் எப்படி கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவார்கள் என்ற வகையிலும் ஒரு பக்கம் ஆலோசித்து வருகிறார்கள். அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என சொல்லப்படுகிறது. எப்படியும் ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இசை வெளியீட்டு விழா நடத்துவது வழக்கம். அப்படித்தான் இந்த படத்திற்கும் இருக்கும் என சொல்லப்படுகிறது.