கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவுலயும் ரஜினியே முதலிடம்... நிரூபித்த கூலி பிசினஸ்!

By :  SANKARAN
Published On 2025-07-07 13:17 IST   |   Updated On 2025-07-07 13:17:00 IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. இந்தப் படத்தில் நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், உப்பன்னா, சுருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வரும் ஆகஸ்டு 14ல் ரிலீஸ் ஆகிறது. ஆனால் இப்போதே படுஜோராக பிசினஸ் நடந்துள்ளது. வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.

கூலி பிசினஸ் ஓவர்சீஸ் ரைட்ஸ் மட்டும் 90 கோடி ரூபாய் போயிருக்காம். தமிழக வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கின படம் இதுதான். ஆந்திரா, தெலுங்கானால மட்டும் 50 கோடிக்கு ரைட்ஸ் எடுத்துருக்காங்க. 30 கோடியைத் தாண்டிய ரைட்ஸ் வாங்கிய முதல் நடிகரே ரஜினிகாந்த் தான்.

தெலுங்குல இருந்து பாகுபலி 2, கேஜிஎப், காந்தாரா படங்கள் மட்டும்தான் இப்படி வாங்கிருக்காங்;க. மற்ற மாநிலத்துல இருந்து அப்படி யாரு வாங்கிருக்கான்னா அது ரஜினி மட்டும்தான். ஜெயிலர் 68 கோடி வரை ஓவர்சீஸ் ரைட்ஸ் போனது. அதே போல கூலி படத்துக்கு 20 கோடி கர்நாடகாவுல ரைட்ஸ் போயிருக்கு.


கர்நாடகாவுலயும் முதல் முறையாக 20 கோடியைத் தொட்டு சாதனை படைத்தது ரஜினிகாந்த் தான். 500 கோடிக்கு மேல் இந்தப் படத்துக்கு ப்ரீ பிசினஸ் ஆகியிருக்குதாம். படம் வெளியாகுறதுக்கு முன்னாடியே பட்ஜெட்டுக்கு மேல லாபம் வந்துடுச்சாம்.

2கே கிட்ஸ்லாம் ரஜினிக்கு ஃபேன்ஸ் கிடையாது. அவருக்கு இப்பல்லாம் இந்தளவுக்கு மார்க்கெட் கிடையாது. வேறொரு நடிகர் தான் நம்பர் ஒன்னுன்னு எல்லாம் சொல்றாங்க. அதெல்லாம் சுத்த பொய்னு கூட எடுத்துக்கலாம். காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும் சூப்பர்ஸ்டார் விஷயம் மட்டும் என்னைக்கும் மாறாது. அது அவருக்குத் தான் பொருந்தும்.

கூலி படத்துக்கு சமீபத்தில் வெளியான சிக்கிடு சிக்கிடு பாடலை 2கே கிட்ஸ்களும் அதிகளவில் ரசிப்பதைக் காண முடிகிறது.மேற்கண்ட தகவலை பிரபல சினிமா பத்திரிகையாளர் சினி முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News