சிவாஜி பேரன் செய்த வேலை!. நடிகர் திலகம் வீடு பறிபோகுமா?!.. ரசிகர்கள் சோகம்!...

By :  Murugan
Update:2025-03-03 13:10 IST

Sivaji Ganesan: பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சிவாஜி கணேசன். நடிப்பில் பல பரிமாணங்களை தொட்டவர் இவர். அதனால்தான் இவருக்கு நடிகர் திலகம் என்கிற பட்டம் கிடைத்தது. சினிமாவில் இவர் ஏற்காத வேடமே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

செண்டிமெண்ட் காட்சிகள் நிறைய குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பெண்கள் மனதிலும் இடம் பிடித்தார். சிவாஜிக்கு போட்டி நடிகராக இருந்தாலும் அவரின் நடிப்பை எம்.ஜி.ஆர் எப்போதும் வியந்து பேசுவார். சிறு வயது முதல் நாடகங்களில் நடித்த அனுபவம் சிவாஜிக்கு சினிமாவில் கை கொடுத்தது.

அதைவிட எவ்வளவு பெரிய வசனம் என்றாலும் அதை மனப்பாடம் செய்து பேசிவிடுவார். அதுதான் அவரின் தனிச்சிறப்பு. இவருக்கு பிரபு, ராம்குமார் என இரண்டு மகன்களும் தேன் மொழி, சாந்தி என இரண்டு மகள்களும் உண்டு. இதில் ராம்குமாருக்கு துஷ்யந்த் மற்றும் சிவாஜி தேவ் என இரண்டு மகன்கள் உண்டு.


இதில், சிவாஜியின் பேரன் துஷ்யந்த் ஜகஜாலக் கில்லாடி என்கிற திரைப்படத்தை தயாரித்திருந்தார். எழில் இயக்கிய இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தை தயாரிக்கும்போது ஒரு ஃபைனான்சியரிடம் 3.74 கோடி கடன் வாங்கியிருந்தார் துஷ்யந்த். ஆனால், அதை திருப்பி செலுத்தவில்லை. எனவே, அந்த ஃபைனான்சியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. இப்போது, வட்டியுடன் சேர்த்து இப்போது 9.39 கோடியை துஷ்யந்த் திருப்பி செலுத்தாதால் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமறம் உத்தரவிட்டிருக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் சென்னை தி.நகர் பகுதியில் அமைந்திருக்கிறது. சினிமா உலகினர் மிகவும் கவுரமாக பார்க்கப்படும் இடம் அது. அதை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், எப்படி சிவாஜி குடும்பத்தின் இந்த விஷயத்தை பேசி தீர்த்து சுமூக முடிவை எட்டுவார்கள் என்றே நம்பப்படுகிறது.


Tags:    

Similar News