திருப்பதி வந்தா திருப்பம் வரும்..ஆனா சந்தானத்திற்கு? 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்
santhanam
DD Next Level: வரும்பதினாறாம் தேதி சந்தானம் நடிப்பில் வெளியாக கூடிய திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் படத்தின் தொடர்ச்சியாகும். இந்த படத்தை ஆர்யா தயாரிக்க பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார் .இந்த நிலையில் படத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற ஒரு பாடலில் பெருமாளை கிண்டல் செய்திருப்பதாக சந்தானம் மீதும் பட தயாரிப்பு மீதும் பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் இந்துக்கள் தங்களுடைய புனித ஸ்தலமாக கருதுவது ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலை தான். ஆனால் இந்த படத்தில் அந்த இந்துக்களின் மனம் புண்படும் வகையில் கோவிந்தா கோவிந்தா என்ற பாடலை வைத்திருக்கிறார்கள். அது திருப்பதி கோவிலை அசிங்கப்படுத்தி உருவாக்கி இருப்பதாக சந்தானம் மற்றும் ஆர்யா மீது புகார் எழுந்திருக்கிறது.
அதற்கு சந்தானமும் நான் பெருமாள் பக்தர் கடவுள். பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் அந்த பாடலை வைத்தேன். அதில் நான் கிண்டல் செய்யவில்லை .எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. பெருமாளை எனக்கு பிடிக்கும் என்று கூறி இருந்தார் சந்தானம். இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் சந்தானத்தின் மீதும் ஆர்யா மீதும் ஒரு நோட்டீசை அனுப்பி இருக்கிறார் .அந்த நோட்டீஸில் இருப்பதாவது:
santhanam
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பாடலை நீக்கக் கோரியும் , 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் நடிகர் சந்தானம் , பட தயாரிப்பு நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு ப்ரகாஷ் ரெட்டி நோட்டிஸ் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.