தனுஷ் கூப்பிட்டு இப்படி சொல்லுவாருனு நினைக்கல.. நெகிழ்ச்சியில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர்

By :  ROHINI
Update: 2025-05-19 11:41 GMT

dhanush

 சசிகுமார்- சிம்ரன் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், பகவதி உள்ளிடட பலரும் நடித்து இருந்தனர். மனித நேயத்தை பேசும் இந்த படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூர்யா ஆகியோர் பாராட்டு தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இந்த படத்தை பாராட்டி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், நடிகர் தனுஷை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், நேற்று நடிகர் தனுஷை சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். அப்போது டூரிஸ்ட் பேமிலி திரைப்பட வெற்றிக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், இந்த படத்தின் டீசரை பார்த்தபோதே இந்த படம் மிக பெரிய வெற்றி பெரும் என்று நினைத்ததாகவும் தன்னிடம் தெரிவித்தாக கூறியுள்ளார். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக ஆக்‌ஷன், வன்முறை சார்ந்த படங்களாகவே வெளிவர அதை பார்த்து ஃபேமிலி ஆடியன்ஸுக்கு போர் அடித்துவிட்டது. சூர்யவம்சம் மாதிரியான நாட்டாமை மாதிரியான குடும்ப கதைகளை எப்போ பார்ப்போம் என்ற அளவுக்கு வன்முறை படங்கள் இளைஞர்களை கெடுத்து வருவதாக ஃபேமிலி ஆடியன்ஸ் நினைத்தனர். அந்த வகையில் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சசிகுமார் பெரும்பாலும் அறிமுக இயக்குனர்களுடனேயே டிராவல் செய்து வருகிறார். கிட்டத்தட்ட 11 இயக்குனர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அதில் இப்பொது அபிஷன் ஜீவிந்தும் இணைந்திருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்திற்கு ரஜினி அழைத்து அவரது பாராட்டுக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News