தரமான ஒரு காதல் படத்துக்கு ரெடியா!.. செம கிளாஸா வெளியான NEEK படத்தின் டிரைலர்..!
Actor Dhanush: தமிழ் சினிமாவில் தற்போது நிற்க கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். அதிலும் தான் இயக்கிய 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்திற்கு பிறகு இயக்கத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார். ராயன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மூன்றாவது திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த திரைப்படத்தை தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து இயக்கி இருக்கின்றார் இந்த திரைப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தனது தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனத்தின் மூலமாக தயாரித்திருக்கின்றார்.
இப்படம் முதலில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாக படத்தை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் அறிமுக நடிகர் பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். மேலும் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ் வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
பாடல்கள் ஹிட்: நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். படத்தில் இருந்து வெளியான ஒவ்வொரு பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. அதிலும் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ என்கின்ற பாடல் யூடியூப்பில் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்திருக்கின்றது. அதனைத் தொடர்ந்து வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.
NEEK டிரைலர்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கின்றது. அதில் நடிகர் தனுஷ் 'இது ஒரு வழக்கமான காதல் கதை என்று கதையை தொடங்குகின்றார்.
படத்தின் டிரைலரை பார்க்கும்போது நிச்சியம் இளைஞர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.