உலகத்துல எந்த மூலையில இருந்தாலும்.. அமானுஷ்யம் நிறைந்த அகத்தியா டிரைலர் எப்படி இருக்கு?..
Actor Jeeva: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் நடிகர் ஜீவா. தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும் முன்னணி நடிகராக வர முடியாமல் தவித்து வருகின்றார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து படங்களில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பிளாக் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
அகத்தியா திரைப்படம்: நடிகர் ஜீவா, ராசி கண்ணா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அகத்தியா. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. "ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்கின்ற கதைகருவுடன் அதிநவீன CGI-யுடன் மனிதனின் உணர்வுகளை கலந்து ஒரு திகில் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் அகத்தியா.
இந்த படத்தை தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியரும், திரைப்பட இயக்குனருமான பா விஜய் இயக்கி இருக்கின்றார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய ஜான் லோகேஷ் படத்தொகுப்பில் படம் உருவாகி இருக்கின்றது
அகத்தியா டிரைலர்: படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாக இருக்கின்றது. கற்பனை கலந்த திகில் கதையை வைத்து நம் கலாச்சார பின்னணியில் வசீகரிக்கும் கலவையுடன் இப்படம் உருவாகி இருக்கின்றது இது ஒரு ஃபேண்டஸி ஹாரர் திரைப்படமாகும்.
டிரைலர் எப்படி இருக்கு: இரண்டு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த டிரைலர் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அனைவரையும் ஈர்க்கும் வகையில் கதை அமைந்திருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் அமானுஷ்யம் தொடர்பான காட்சிகளும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கின்றது. இந்த திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மட்டுமில்லாமல் பீரியட் படமாகவும் உருவாகி இருக்கின்றது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைபெறும் சம்பவத்தில் நிகழ்காலத்தை தொடர்ப்புபடுத்தி மிக சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருப்பது ட்ரெய்லரில் பார்க்க முடிகின்றது. மேலும் இந்த ட்ரெய்லரின் தொடக்கத்தில் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் ஆத்மாக்களை சந்திக்கப் போகின்றேன் என்று ஜீவா பேசுகின்றார்.
இறந்து போனவர்கள் ஏதோ ஒரு விதத்தில் நம்மிடம் பேசுவதற்கு முயற்சி செய்வார்கள் என்பதையும் இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருக்கின்றார். ஜீவாவுக்கும் 120 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திற்கும் தொடர்பு படுத்தி இந்த கதையை கொண்டு சென்று இருக்கிறார்கள். படத்தின் டிரைலரை பார்ப்பதற்கு திகிலாக இருக்கும் நிலையில் நிச்சயம் இப்படம் வெற்றி படமாக அமையும் என்று கூறப்படுகின்றது.