காலேஜ் மொத்தத்தையும் அலறவிட்ட பிரதீப் ரங்கநாதன்!.. டிராகன் படத்தின் டிரைலர் எப்படி இருக்கு?..

By :  Ramya
Update:2025-02-10 19:32 IST

Pradeep Ranganathan: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குறும்படங்களை இயக்கி வந்த பிரதிப் ரங்கநாதன் கோமாளி என்கின்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். ரவி மோகன், காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு லவ் டுடே என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.


இந்த திரைப்படம் குறைந்த பட்சத்தில் எடுக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்தது. இன்றைய இளம் தலைமுறை கவரும் வகையில் இந்த திரைப்படம் அமைந்திருந்ததால் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும் தன்னை நிரூபித்து விட்டார்.

விக்னேஷ் சிவனுடன் கூட்டணி: லவ் டுடே திரைப்படத்தை முடித்த கையோடு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து எல்ஐகே என்கின்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை படம் முடிந்த பாடில்லை. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன் கமிட்டான திரைப்படம் தான் டிராகன்.

டிராகன் திரைப்படம் : இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபாமா பரமேஸ்வரன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் சார்ஜ், விஜே சித்து ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருக்கின்றார்.


ஓ மை கடவுளை திரைப்படத்தை இயக்கி பிரபலமான அஸ்வத் மாரிமுத்து இரண்டாவதாக இயக்கி இருக்கும் திரைப்படம் டிராகன். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் டிராகன் படத்தின் டிரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள்.

டிராகன் டிரைலர்:  ஒரு கல்லூரியில் யார் சொல்லுக்கும் அடங்காத ஒரு மாணவனின் கதை மற்றும் அவர் வாழ்க்கையில் சந்திக்கும் நட்பு, காதல், சிக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். காலேஜில் கெத்தான கேரக்டரில் வலம் வரும் கதாநாயகன் படித்த முடித்ததற்கு பிறகு எது போன்ற சோதனைகளை சந்திக்கின்றான்.

ஒரு கட்டத்தில் அனைவரும் அவனை கிண்டல் செய்ய அதிலிருந்து வெல்வதற்கு எடுக்கும் முன்னெடுப்புகள், காதல் ஆகிய அனைத்தும் நிறைந்ததாக இந்த படம் இருக்கின்றது. நிச்சயம் லவ் டுடே திரைப்படத்தை போலவே இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Full View
Tags:    

Similar News