அது மட்டும் நடந்துச்சுன்னா!.. அடுத்த 10 வருஷத்துக்கு தனுஷ்தான் கிங்.. இவரே சொல்லிட்டாரே..
நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். ஒரு நடிகராக தன்னை சிறந்த நடிகர் என்பதை எப்போதும் நிரூபித்து விட்டார். தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமாகி அதன் பிறகு பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் தற்போது இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார்.
அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த வெற்றியையும் பெற்றிருக்கின்றார் நடிகர் தனுஷ். தற்போது படங்களில் நடிப்பது மற்றும் தன்னுடைய இயக்கம் என இரண்டிலும் படு பிஸியாக இருந்து வருகின்றார். இவர் கடைசியாக தன்னுடைய 50-வது படமான ராயன் என்கின்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
100 கோடிக்கு மேல் வசூல் செய்து படம் சாதனை படைத்தது. இதனால் தொடர்ந்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றார். நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி தயாரிக்கவும் முடிவு செய்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார் நடிகர் தனுஷ்.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை இந்த திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு கிராமத்து கதையை மையமாக வைத்து இயக்கி இருக்கின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது.
இதற்கிடையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இப்படத்தில் தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இந்த படத்தை முடித்த பிறகு இசைஞானி இளையராஜாவின் திரைப்படத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் தனுஷ் குறித்து சினிமா விமர்சகர் அந்தணன் சில விஷயங்களை பகிர்ந்திருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ' ஒரு ஹீரோவாக நடிகர் தனுஷ் தன்னை எப்போதும் நிரூபித்து விட்டார். தற்போது இயக்குனராக நிரூபிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார். இவரது இயக்கத்தில் வெளிவந்த ராயன் திரைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம். மிகச் சிறந்த வகையில் ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என்பதை தெரிந்து அந்த படத்தை இயக்கியிருந்தார்.
அந்த வகையில் இட்லி கடை திரைப்படமும் வெற்றி பெற்றுவிட்டது என்றால் அடுத்த பத்து வருடத்திற்கு நடிகர் தனுஷை தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இயக்குனராக மிகப்பெரிய நபராக வளம் பெறக்கூடிய வாய்ப்பு அவருக்கு இருக்கின்றது. ஹீரோவாக இல்லை என்றாலும் நிச்சயம் இயக்குனராக தமிழ் சினிமாவில் நீடிப்பார் என்று அவர் கூறியிருக்கின்றார்.