யாருமே தொட முடியாத பாலசந்தரின் அந்தப் படம்! கன்னடத்தில் காப்பி அடிச்சு இப்படி ஆயிடுச்சே
ஏற்கனவே வெற்றிப்பட்ட திரைப்படத்தை மொழிமாற்றம் செய்யும் பேரில் பல இயக்குனர்கள் அதை காப்பி என்ற அடிப்படையில் ரீமேக் செய்து வெளியிடுவார்கள். அது சில சமயங்களில் கை கொடுக்கும். சில சமயங்களில் தோல்வியை கொடுக்கும். இதனாலேயே வெற்றிப்பெற்ற படம் வெற்றிப்பெற்றதாகவே இருக்கட்டும் என ரீமேக் பக்கமே போக மாட்டார்கள்.
அப்படித்தான் கே.பாலச்சந்தரின் ஒரு படத்தை தொடவே அனைவரும் பயந்தார்கள். ஆனால் ஒரு இயக்குனர் தைரியமாக அதை அப்படியே காப்பி அடித்து கன்னடத்தில் வெளியிட்டார். அது 1978 ஆம் ஆண்டு வெளியான மரோசரித்ரா திரைப்படம். தெலுங்கில் வெளியான இந்தப் படத்தில் கமல் மற்றும் சரிதா ஆகியோர் நடித்திருந்தனர். அது அப்படியே ஹிந்தியிலும் ஏக் துஜே கேலியே என்ற பெயரில் வெளியானது.
ஹிந்தியில் அந்தப் படம் சூப்பர் வெற்றி. அதே போல் தெலுங்கிலும் 700 நாள்கள் மேல் ஓடியது. இதை தமிழில் மொழி மாற்றம் செய்யவில்லை. ஏனெனில் தெலுங்கு பதிப்பே சென்னை மற்றும் பிற பகுதிகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்திற்காக பாலசந்தருக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அதன் பிறகு இந்த படத்தை யாரும் தொடவில்லை.
maro
ஆனால் இயக்குனர் பாரதிகண்ணன் மட்டும் மரோசரித்ரா படத்தை அப்படியே காப்பி அடித்து கன்னடத்தில் லவ் ஸ்டோரி என்ற பெயரில் வெளியிட்டார். அங்கு 75 நாள்கள்தான் ஓடியதாம். இருந்தாலும் சுமாராகத்தான் காப்பி அடிக்க முடிந்தது என பாரதி கண்ணன் கூறினார். ஆனால் இந்த கன்னட பதிப்பை பாலச்சந்தர் பார்க்கவில்லையாம். அதை பாரதிகண்ணனும் விரும்பவில்லையாம்.