Coolie: கூலிக்கு இருக்கும் ஹைப்! அதையும் தாண்டி படத்துல ஒன்னு இருக்கு.. அல்லு விடும் அனிருத்
coolie
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகர்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், சுருதிஹாசன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
பெரிய ஸ்டார் காஸ்ட் படமாக கூலி படம் உருவாகியிருக்கிறது. அதனால் படத்தின் மீது பெரிய அளவில் ஹைப் இருக்கிறது. இன்னொரு பக்கம் பூஜா ஹெக்டே ஒரு சோலோ பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். மோனிகா என தொடங்கும் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது, ஜெயிலர் படத்தில் எப்படி காவாலா பாடல் உலகெங்கும் பிரபலமானதோ அதே போல் மோனிகா பாடலும் பிரபலமாகும் என எதிர்பார்த்தனர்.
அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. பூஜா ஹெக்டேவின் நடனம் கூடவே சௌபின் சாஹிரின் டாஸ்ன்ஸும் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது. படம் ரிலீஸுக்கு முன்பே ஓவர் சீஸில் பெரிய வியாபாரத்தை எதிர்கொண்டிருக்கிறது. துபாயில் ஒரு பெரிய நிறுவனம் தான் கூலி படத்தின் ஓவர்சீஸ் உரிமையை கைப்பற்றியிருக்கிறது.
இந்த நிலையில் படத்தை பற்றி அனிருத் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். கூலி படத்திற்கு பெரிய அளவு ஹைப் கிரியேட் ஆகியிருக்கிறது. அது ஏனெனில் முதன் முறையாக லோகியும் தலைவரும் இணைந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நானும் லோகியும் என்ன படம் பண்ணாலும் அதுக்கு மியூஸிக்கிற்கு நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் வந்துவிடும்.
அதன் பிறகு தலைவரும் நானும் சேர்வது, இதெல்லாம் சேரும் போது வேற லெவலில் இருக்கும். அதோடு இந்த ஸ்டார் காஸ்ட் என்பது வேறு எந்த படத்துக்கும் அமையாது. இரண்டு நாளுக்கு முன்புதான் லோகியுடன் பேசினேன். அப்போது ஹைப் ஒரு பக்கம் இருந்தாலும் மூன்று பாடல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. 5 பேரோட பேக் ஷாட் மட்டும்தான் வந்திருக்கிறது. ஆனால் டீஸரோ டிரெய்லரோ இன்னும் ரிலீஸாகவில்லை.
இதுக்கே இவ்ளோ ஹைப் வந்திருக்கிறது. ஆனால் என்ன எதிர்பார்க்கிறோம் என்றால் இது சூப்பரான ஒரு intelligent ஆன திரைப்படம். இந்த ஒரு வார்த்தைதான் தேவைப்படுகிறது. லோகியின் அழகான ஸ்கிரீன் ப்ளே அதுவும் பெரிய லெஜெண்ட் நடிகர்களுடன் எனும் போது வேறமாதிரி வர போகிறது கூலி என அனிருத் கூறியிருக்கிறார்.