Pandian Stores2: கதிர் தன்னை கல்யாணம் செய்துக்கொண்ட ரகசியத்தை சொன்ன ராஜி… அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ராஜி தனக்கு கதிர் செய்ததை சொல்லத் தொடங்குகிறார். நான் காதலித்த பையன் கதிர் இல்லை. இன்னொருவன். அவனை நம்பி தான் நான் வீட்டை விட்டு ஓடிப் போனேன் எனக் கூற குடும்பத்தினர் உறைந்து நிற்கின்றனர். இவர் கல்யாண கதையை தொடங்க கோமதி பயத்தில் மீனாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்கிறார்.
ராஜி தான் செய்து வைத்த கல்யாண கதையை கூறப் போவதாக கோமதி பதறி கொண்டு இருக்க மீனா பதற்றத்தில் அவரை அமைதிப்படுத்துகிறார். செந்தில் வந்து நீங்க எதுக்கு நினைக்கிறீங்க என கேட்க அத்தைக்கு படபடப்பாக வருவதாக கூறி அவரை அனுப்பிவிடுகிறார்.
வெளியில் ராஜி நான் அந்த பையனுடன் திருச்செந்தூருக்கு போய் விட்டேன். ஆனால் அந்த பையன் என்னை ஏமாற்றி நகையை எடுத்து வந்தது எனக்கு தெரியாது. அவனிடம் அது குறித்து கேட்டபோது என்னை அடித்து கீழே தள்ளிவிட்டு அவன் தப்பித்து ஓடி விட்டான். அங்கு தான் மீனா மற்றும் கோமதியுடன் வந்த கதிரை சந்தித்தேன்.
அவர் என்ன விஷயம் என்னிடம் கேட்டபோது நடந்த விஷயங்களை அவரிடம் கூறினேன். அவர் என்னை அவர் வீட்டிற்க்கே அழைத்தபோது எந்த உரிமையில் நான் வர முடியும் என யோசித்தேன். வீட்டிற்கு வந்தால் உங்களிடம் அடி வாங்கணும் அசிங்கப்படணும் என நினைத்து கதிரிடம் என்னை கட்டிக்க சொல்லி நான் தான் கேட்டதாக கூறுகிறார்.
பின்னர் தனக்காகவும் நம் குடும்பத்தின் மானத்தை காக்கவும் கதிர் என்னை கல்யாணம் செய்து அழைத்து வந்ததாக கூற கோமதி மற்றும் மீனா ஆசுவாசமடைகின்றனர். இதை கேட்டு குடும்பத்தினர் இது உண்மையா என கேட்க அப்பத்தா என் மேல சத்தியம் பண்ண என கேட்கவும் தன்னுடைய மொத்த குடும்பத்தின் மீதும் சாமி மீதும் சத்தியம் செய்கிறார் ராஜி.
எடுத்துட்டு ஓடினவன் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தோம். அவனிடமிருந்து பாதி நகையை மீட்டுக் கொண்டு வந்தார்கள். கதிர் சித்தப்பாவிடம் கொடுத்து உங்களிடம் கொடுக்க தான் சொன்னான். எனக்கு செய்த நன்றி கடனுக்காக அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நகையை விற்க நானே முடிவு செய்தேன் என ராஜி கூறுகிறார். இதைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியாகி அங்கிருந்து சென்று விடுகின்றனர்.
ராஜியை கதிர் வீட்டுக்குள் அழைப்பு செல்கிறார். எல்லாரும் அமைதியாக இருக்க மயில் மீனாவிடம் இதனால்தான் நீயும் அதையும் அடிக்கடி குசுகுசுன்னு பேசிக்கிட்டீங்களா. உங்களுக்கு இந்த கல்யாண விஷயம் பண்ணவே தெரியுமா என கேட்க மீனா எனக்குமே இது புதுசு தான் என மாற்றிப் பேசி விடுகிறார்.
கோமதியிடம் நீங்க இப்படியே அமைதியாக இருந்தீங்கன்னா எல்லோரும் நம்ம மேல சந்தேகப்படுவாங்க எனக் கூறி அவரை பேச சொல்கிறார். கோமதி கல்யாண விஷயம் கூட விடு நகை விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்க குடும்பத்தினர் அவரை ஒரு மாதிரியாக பார்த்து விடுகின்றனர். ராஜி பாண்டியனிடம் மன்னிப்பு கேட்க அவர் சமாதானமாகி உள்ளே சென்று விடுகிறார். குடும்பத்தினர் அவர் அமைதியை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் அமைதியாக இருக்கின்றனர்.