வெறும் ஒரு ரூபாயை அட்வான்சாக வாங்கிய ரஜினிகாந்த்.. அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்துக்கா?..
நடிகர் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வளம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். 74 வயதான போதிலும் தற்போது வரை சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். அதுவும் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஏ எல் ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிப்ரவரி மாதத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் மே மாதம் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை முடித்த கையோடு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் நிச்சயம் ஜெயிலர் 2 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது படத்திற்கு முன் பணமாக வெறும் ஒரு ரூபாயை மட்டும் வாங்கி இருக்கின்றார். இந்த தகவலை பிரபல இயக்குனர் பகிர்ந்து இருக்கின்றார். நடிகர் ரஜினியை வைத்து பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குபேரன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பி வாசு.
இவர்களது கூட்டணியில் உருவான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட். அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று. இந்த திரைப்படத்திற்கு நடிகர் ரஜினி நடிப்பதற்கு முன்பு அட்வான்ஸாக வெறும் ஒரு ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டாராம். முதலில் படத்தை முடியுங்கள் பின்னர் வியாபாரம் ஆன பிறகு என் சம்பளத்தை வாங்கிக் கொள்கின்றேன் என்று கூறினாராம்.
ஏன் அப்படி செய்தார் என்று கேட்டதற்கு தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து ரஜினி இப்படி செய்ததாக கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் சிவாஜி படத்திற்கு கூட வெறும் ஆயிரம் ரூபாயை தான் முன்பணமாக வாங்கியிருக்கின்றார். படம் துவங்குவதற்கு முன்னதாக பெரிய தொகையை தயாரிப்பாளர்களிடமிருந்து முன் பணமாக வாங்கினால் அது கஷ்டத்தை கொடுக்கும்.
படம் எல்லாம் முடிந்த பிறகு வியாபாரமான பிறகு சம்பளத்தை வாங்கிக் கொள்வது சரியாக இருக்கும் என்று கூறினாராம் ரஜினிகாந்த். இதனை தனது பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார் இயக்குனர் பி வாசு.