பயோபிக் எடுத்தா அவருடைய கதையைத்தான் எடுப்பேன்!.. ஷங்கருக்கு இப்படி ஒரு ஆசையா?..
Director Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் இயக்குனர் சங்கர். தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் பல பிரம்மாண்டங்களை காட்டி தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வைத்திருக்கிறார். இவரின் திரைப்படங்கள் என்றாலே அதில் பிரம்மிப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்தியன் 2: இயக்குனர் சங்கர் கடைசியாக கமல்ஹாசன் அவர்களை வைத்து இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இயக்குனர் சங்கரை பலரும் ட்ரோல் செய்து வந்தார்கள். அதற்கு முன்பு வரை தோல்வியே கண்டிராத இயக்குனராக வளம் வந்த ஷங்கருக்கு இந்தியன் 2 மிகப்பெரிய சரிவை கொடுத்தது. இருந்தாலும் தனது அடுத்த படத்தின் மூலம் கம்பக் கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
கேம் சேஞ்சர் : தற்போது தெலுங்கில் நடிகர் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார் இயக்குனர் ஷங்கர். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இதனால் படம் நிச்சயம் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று முதல் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் தெலுங்கானா மற்றும் ஆந்திரா பகுதிகளில் முன்பதிவு அமோகமாக இருந்து வருகின்றது. தமிழகத்திலும் 95 சதவீதம் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த திரைப்படத்தில் நடிகர் ராம்சரனுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் தொடங்கி தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் ராம்சரண், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் தொடர்ந்து படத்தின் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரஜினி பயோபிக் : இயக்குனர் சங்கர் சமீபத்திய பேட்டியில் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார். அந்த வகையில் தொகுப்பாளர் இயக்குனர் சங்கரிடம் தற்போது உங்களுக்கு பயோபிக் எடுக்கும் ஆசை இருக்கின்றதா என்று கேட்டார் .அதற்கு பதில் அளித்த இயக்குனர் சங்கர் தற்போது வரை எனக்கு பயோபிக் எடுக்கும் எண்ணம் இல்லை.
ஒரு வேலை அப்படி எடுப்பதாக இருந்தால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசை இருப்பதாக கூறி இருக்கின்றார். ரஜினி சார் மிகவும் நல்ல மனிதர். அவரின் வாழ்க்கையை வரலாற்று படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கின்றார். இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் சங்கர் நடிகர் ரஜினியை வைத்து எடுத்த சிவாஜி, எந்திரன், 2.0 இந்த மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.