மாநாட்டில் விஜய்க்கு பாதுகாப்பு... வெளிநாட்டிலிருந்து இறக்கப்பட்ட பவுன்சர்கள்... காரணம் என்ன..?

மாநாட்டில் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக துபாய் நிறுவனத்தில் இருந்து பவுன்சர்களை நியமித்திருப்பதாக தகவல்.

By :  ramya
Update: 2024-10-26 13:27 GMT

vijay 

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அது மட்டும் இல்லாமல் தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் திடீரென்று தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்து இருக்கின்றார்.

அரசியல் கட்சியை தொடங்கியது மட்டும் இல்லாமல் அதனை முறையாக பதிவு செய்து கட்சியின் கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்தார். தற்போது தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கின்றது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரபாண்டி தொகுதி வி சாலையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைவர்களின் கட்டவுட் தொடங்கி பிரம்மாண்டமான மேடை, பல்லாயிரம் பேர் அமரும் இடம், உணவு வழங்கும் இடம், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. நாளை மாநாடு தொடங்க உள்ளது. இதில் நடிகர் விஜய் இரண்டு மணி நேரம் பேச இருக்கின்றார். அவரின் பேச்சை காண ஏராளமானோர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பொதுவாக பெரிய பெரிய தலைவர்கள் மற்றும் நடிகர்களின் பாதுகாப்புக்கு பவுன்சர்கள் நியமிக்கப்படுவது வழக்கம் தான்.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் பாதுகாப்புக்காக துபாயை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். Gentur எனப்படும் துபாய் நிறுவனத்தை தான் விஜய் தனது பாதுகாப்பிற்காக நியமித்திருக்கின்றார். இந்த நிறுவனத்தின் பவுன்சர்கள் விஜய்க்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் எடுத்து பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.

சமீபத்தில் விஜய் நடத்திய கல்வி விருது வழங்கும் விழா, கட்சியின் கொடி, அறிமுகம் விழா என அனைத்துக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்று பாதுகாப்பு கொடுத்தார்கள். 2004 ஆம் ஆண்டு துபாயில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்புகளை கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் நடிகர் விஜயின் மாநாடு நடைபெற உள்ள திடலை ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த நிறுவனம் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாகவும், ஒரு வாரமாக வெளியாட்கள் யாரையுமே இந்த திடலுக்குள் அனுமதிக்காமல் கடும் கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பு பலப்படுத்தி இருக்கிறார்கள். விஜய்யை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் செல்வது மேலும் நிகழ்ச்சி முடிந்து அவரை பாதுகாப்பாக வைக்கும் வரை இந்த நிறுவனத்தின் பொறுப்பு தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News