‘ப்ளடி பெக்கரே’ பெட்டர் ப்ரோ! 200 ரூவா கொடுத்தேன் ப்ரோ.. குபேராவால் பிச்சையெடுக்கும் ஃபேன்ஸ்

By :  ROHINI
Published On 2025-06-20 16:27 IST   |   Updated On 2025-06-20 16:27:00 IST

kubera

இன்று தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குபேரா. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி இருக்கிறது குபேரா திரைப்படம். இதுவரை இல்லாத வகையில் தனுஷ் இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் தனுஷுக்கு வில்லனாக நாகர்ஜுனா இந்த படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா லீடு ரோலில் நடித்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இப்போதுதான் படம் ரிலீஸ் ஆகி இருக்கின்றது .படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தில் தனுஷ் பிச்சைக்காரன் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

கோடீஸ்வரர் தொழிலதிபராக நாகார்ஜுனா நடித்திருக்கிறார் .இவரின் சூழ்ச்சி வலையில் சிக்கும் பிச்சைக்காரரின் வாழ்க்கையை மையப்படுத்தி தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை படத்தை பற்றி பாசிட்டிவ் ரிவ்யூஸ் வந்து கொண்டிருக்கின்றது ..ஒரு சில பேர் எப்போதும் போல படத்தை பற்றி நெகடிவ் கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர் .

திரைக்கதையை பொறுத்த வரைக்கும் படத்தில் எந்த குறையும் இல்லை என்றும் கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் சேகர் கம்முலா ஒரு டீசன்டான க்ரைம் டிராமாவை எழுதி இருக்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கடைசிவரை படம் என்ன சொல்ல வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தை பார்த்த இரண்டு ரசிகர்கள் படத்தில் நாகார்ஜுனா தான் பெஸ்ட்.

kubera

அவருக்காக படத்தை பார்க்கலாம். மற்றபடி படத்தில் ஒன்றும் இல்லை. தனுஷ் நடிப்பு நன்றாக இருக்கிறது .ஆனால் படத்தில் கதை என எதுவுமே இல்லை .இந்த படத்திற்கு ப்ளடி பெக்கர் திரைப்படம் எவ்வளவோ மேல். அந்தப் படத்தில் அவ்வப்பொழுது காமெடி சிரிக்கும் மாதிரியான காட்சிகள் இடம் பெற்றன. ஆனால் இந்த படத்தில் நாகார்ஜுனாவின் நடிப்புதான் நன்றாக இருக்கிறது. ஒரு தடவை படத்தை பார்க்கலாம் .200 ரூபாய் கொடுத்து படத்தை பார்க்க வந்திருக்கிறோம். பணம்தான் வேஸ்ட் என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

Tags:    

Similar News