கோட் படத்தின் கிளைமேக்ஸ் அப்படியே காப்பியா?!.. இதுல ஆயிரம் கோடின்னு உருட்டு வேற!...

கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

By :  Admin
Update: 2024-09-20 14:30 GMT

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த வெங்கட்பிரபு சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். நண்பர்கள் இணைந்து ஜாலி பண்ணுவதுதான் இவரின் படங்களின் கதை. சென்னை 28ம் அப்படியே இருந்தது. ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் இப்படம் வெற்றி பெற்றது.

அதன்பின் சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இதில், மங்காத்தா சூப்பர் ஹிட் அடித்தது. ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அஜித் இப்படத்தின் மூலம் ஆண்ட்டி ஹீரோவாக மாறினார். வினாயக் கதாபாத்திரம் அஜித்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார்.

இப்போது விஜயை வைத்து கோட் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். கடந்த 5ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் கோட் படம் வொர்க் அவுட் ஆகவில்லை எனினும் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்த படம் துவங்கியது முதலே இது இந்த படத்தின் காப்பி.. அந்த படத்தின் காப்பி என பல தகவல்கள் வெளியானது. குறிப்பாக ஹாலிவுட்டில் வெளிவந்த ஜெமினி படத்தின் இன்ஸ்பிரேசன் என சொல்லப்பட்டது. இதை வெங்கட்பிரபுவும் ஒப்புக்கொண்டார். படம் வெளியான பின் படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இருந்து விபி சுட்டிருக்கிறார் என வீடியோ ஆதாரத்துடன் சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் பதிவிட்டார்கள்.

குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியானது. படத்தின் இறுதியில், விஜய் தன் மகளிடம் ‘நீ யாரோட ஃபேன்?’ என கேட்பார். உடனே அவர் வில்லன் விஜயின் முகத்தில் தலையால் மோதி தப்பிப்பார். உடனே அப்பா விஜய் மகன் விஜய் சுட்டுவிடுவார். அதாவது அவர் தல அஜித் ரசிகை என்பது போல காட்டியிருந்தார்.

இந்நிலையில், இது ஒரு ஹாலிவுட் படத்தில் வந்தது என சொல்லி அந்த வீடியோவையும் சில அஜித் ரசிகர்கள் பகிர்ந்து ‘யோவ் வெங்கட்பிரபு கிளைமேக்ஸ் வேற லெவல்னு சொன்ன. அதுவும் உன் ஐடியா இல்ல.. காப்பிதானா?.. இதுல 1000 கோடின்னு உருட்டு வேற’ என கிண்டலடித்திருக்கிறார் ஒருவர்.






Tags:    

Similar News