ஜெயிலர் 2-வில் அந்த நடிகருக்கு முக்கிய வேடம்!.. ரஜினி எப்படி ஒத்துக்கிட்டாரு!...

ஜெயிலர் 2 தொடர்பான முக்கிய அப்டேட் வெளியே கசிந்திருக்கிறது.

By :  Admin
Update: 2024-09-20 15:30 GMT

Jailer 2: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியிருந்தது. அப்படத்திற்கு முன்பு ரஜினியின் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அந்த படத்தின் வெற்றி ரஜினிக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.

அதேபோல், பீஸ்ட் படத்தால் சமூகவலைத்தளங்களில் ட்ரோலில் சிக்கினார் நெல்சன். ஆனாலும் அவரை நம்பி படம் கொடுத்தார் ரஜினி. அவரின் கணக்கு தப்பாய் போகவில்லை. படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இதுவரை விஜயின் படங்களே அந்த வசூலை நிகழ்த்தவில்லை.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதே அப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. இப்படத்தின் வசூலில் சந்தோஷப்பட்ட கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன், அனிருத் என எல்லோருக்கும் புதிய கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் வினாயக் வில்லனாக கலக்கி இருந்தார்.

அதோடு, இந்த படத்தில் மோகன்லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார்கள். எனவே, கர்நாடகா மற்றும் கேரளாவில் இப்படம் நல்ல வசூலை பெற்றது. இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அடுத்து ஜெயிலர் 2 படத்தை எடுக்கும் திட்டம் இருக்கிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதையை நெல்சன் எழுதி விட்டார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் மோகன்லால் மீண்டும் நடிக்கவிருக்கிறாராம். முதல் பாகம் போல கேமியோவாக இல்லாமல் ரஜினிக்கு நிகரான வேடம் அவருக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.



 பொதுவாக தன்னுடைய படத்தில் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என ரஜினி விரும்புவார். ஜெயிலர் படத்தில் கூட அவரின் மகனாக நடிக்க சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டார். ஆனால், ரஜினி மறுத்துவிட்டார். ஆனால், ஜெயிலர் 2-வில் மோகன்லாலுக்கு முக்கிய வேடம் என்பதை எப்படி ஒப்புக்கொள்வார் என்பது தெரியவில்லை.

ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் அவர் ஜெயிலர் 2-வில் நடிக்கவிருக்கிறார். மேலும், அவரின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.


Tags:    

Similar News