குட் பேட் அக்லி படம் 250 கோடி தான் வசூலாகுமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்
அஜீத்துக்கு வேண்டாதவங்க சொல்றதை எல்லாமா நம்புவீங்க?
பிரபல பத்திரிகையாளரும், அஜீத்தின் முன்னாள் மேனேஜருமான வி.கே.சுந்தர் அஜீத் குறித்தும் குட்பேட் அக்லி குறித்தும் வரும் வதந்திகளுக்குப் பதில் சொல்லி இருக்கிறார்.
அஜீத் நடிக்கிற குட்பேட் அக்லி படத்தோட பட்ஜெட் 360 கோடின்னு என்ன கணக்குல சொல்றாங்கன்னு தெரியல. ஸ்பெயின்ல நடக்குற படப்பிடிப்பு தொடங்கியாச்சு. இது முடிய 2 மாசம் ஆகும். அப்போ தான் என்ன செலவாகும்னு சொல்ல முடியும். அதுக்கு முன்னாடி வர்ற எல்லாமே பொய்யான தகவல் தான்.
இன்னொரு விஷயம் என்னன்னா இந்தப் படம் 260 கோடிக்குத் தான் பிசினஸ் ஆகும்னு சொல்றாங்க. ஒரு தயாரிப்பு நிறுவனம் இவ்ளோ கோடி லாஸ் ஆகும்னா அது எப்படி அந்தப் படத்தை எடுப்பாங்க?
உங்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு தொடர்ச்சியா படத்தை எடுக்குற தயாரிப்பு நிறுவனத்துக்குத் தெரியாமலா இருக்கும்? இந்தப் படத்துக்கு 360 கோடி ரூபாய் செலவு பண்றோம். வெறும் 260 கோடி ரூபாய் தான் வியாபாரம் ஆகும்கற முன் முடிவான கணக்கு அவருக்கு எப்படி தெரியாமப் போச்சு?
அப்போ எங்கே பொய் சொல்றாங்க? யாரு சொன்னான்னு புரிஞ்சிக்கணும். அப்புறம் இன்னொரு தகவல் அதை இப்போ சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்றேன். அடுத்து அஜீத், டைரக்டர் சிறுத்தை சிவா இணைந்து இன்னொரு படம் பண்ணப் போறாங்க.
இதையும் மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தான் தயாரிக்குது. அதுக்கான பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாங்க.
குட்பேட் அக்லி படத்தை இதே மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் எடுக்குது. நல்ல வியாபாரம் ஆகும்கறதால தான் திரும்பவும் இதே அஜீத்தை வைத்து எடுக்க முன்வந்துருக்காங்க. இன்னொரு விஷயம். ஹைதராபாத்ல நடந்த சூட்டிங்ல அஜீத்தோட பர்ஸ்ட் லுக் போட்ட மறுநாளே நெட்பிளிக்ஸ் அந்தப் படத்தை 100 கோடி விலை கொடுத்து வாங்கிடுச்சு.
அதுவே பெரிய தொகை. இதுக்கு அப்புறம் ஓவர்சீஸ், தியேட்டர்கள்னு நிறைய பிசினஸ் நடக்க இருக்கு. அதனால அஜீத்தை மட்டம் திட்டமிட்டு மட்டம் தட்டுறதுக்காக வந்த செய்தி. இதை நம்பாதீங்க என்று தெரிவித்துள்ளார்.