சிம்பு படத்துக்கே ஹீரோயின் கிடைக்கலையா?.. முடிய நீளமா வளர்த்தது தப்பா போச்சே..!

By :  Ramya
Update: 2025-02-05 15:02 GMT

Actor Simbu: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. சினிமாவில் நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த சிம்பு அதன் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். இது ஒரு புறம் இருக்க மன அழுத்தத்தால் உடல் எடை கூடி நடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த சிம்பு சிறிது பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் நடிக்க வந்தார்.

மாநாடு திரைப்படம் இவருக்கு மிகச்சிறந்த கம்பேக்கை கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவுக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வெற்றியை கொடுத்தது. இதனால் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார் சிம்பு.


சிம்பு லைன் அப்: நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மூன்று படத்தின் அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது.

இது சிம்புவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்திருக்கின்றது. நடிகர் சிம்பு அடுத்ததாக பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தின் எஸ்டிஆர் 49 என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இதனை முடித்த கையோடு அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், அதனை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

ஆத்மன் தயாரிப்பு நிறுவனம்: நடிகர் சிம்பு ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க  இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. அதாவது கமல்ஹாசன் தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை பெரிய பட்ஜெட்டில் இருக்க இருப்பதாக கூறி வந்தார்கள்.

பின்னர் கமல்ஹாசன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவில்லை என்று முடிவு எடுத்த பிறகு சிம்பு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கின்றார். இதன் மூலமாக தேசிங்கு பெரியசாமியுடன் இணைந்து அப்படத்தை எடுப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

தலைமுடி பிரச்சனை: நடிகர் சிம்பு தற்போது தக் லைப் திரைப்படத்திற்காக நீண்ட அளவிற்கு முடியை வளர்த்திருக்கின்றார். இதே ஹேர் ஸ்டைலில் தான் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். அதாவது இந்த திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள நிலையில் அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு நீண்ட முடி தேவைப்படுவதால் அந்த ஹேர் ஸ்டைலை அப்படியே மெயின்டைன் செய்து வருகின்றார் சிம்பு.


ஆனால் அதுவே தற்போது எஸ்டிஆர் 49 திரைப்படத்திற்கு பிரச்சினையாக மாறி இருக்கின்றது. அதாவது ராம்குமார் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் லுக் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்பதால் முடியை வெட்ட வேண்டும் என்கின்ற நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் வரும் மார்ச் மாதம் எஸ்டிஆர் 50 படத்தின் புரோமோ சூட்டை எடுத்து முடித்துவிட்டு முடியை வெட்ட இருக்கின்றாராம்.

ஏப்ரல் மாதம் முதலே எஸ்டிஆர் 49 படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் மற்றொரு தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்திற்கு இன்னும் கதாநாயகி தேர்வு முடிவடையவில்லை என்று கூறப்படுகின்றது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் சிம்பு படத்திற்கே ஹீரோயின் கிடைக்கலையா? என்று கூறி வருகிறார்கள்.

Tags:    

Similar News