நாளை விடாமுயற்சி ரிலீஸ்… களைக்கட்டும் திருவிழா… புக் பண்றதுக்கு முன்ன இத படிங்க!

By :  Akhilan
Update: 2025-02-05 13:38 GMT

Vidaamuyarchi: அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் திரையரங்குகள் திருவிழா கோலம் போட்டு இருப்பது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் தான் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை கடந்து விட்ட நிலையில் அவருடைய தரிசனம் திரையரங்கில் எப்போது கிடைக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் முதலில் அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் நாளை பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இப்படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் பிரேக் டவுனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அஜித்தை படத்தின் மீது நம்பிக்கை வைத்து தன்னுடைய இயக்குனரை மட்டும் தேர்வு செய்து அவரிடம் இந்த கதையை கொடுத்திருக்கிறார்.

முக்கிய வேடத்தில் திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அஜர்பைஜானில் அதிக அளவில் படமாக்கப்பட்ட திரைப்படம் பல மாத போராட்டத்திற்கு பின்னர் கடந்த டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டது. பின்னர் இந்த சில வேலைகளால் பொங்கல் ரிலீஸை தவறவிட்டது.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்த நிலையில் இப்படத்தை நாளை வெளியிடுகிறது. விடாமுயற்சி திரைப்படத்தில் நிறைய அஜர்பைஜான் மொழி இருப்பதால் பெரும்பாலான திரைப்படம் சப்டைட்டிலுடன் தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் தனியே இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக இருப்பதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிவித்திருக்கிறார். பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் புக்கிங் இதுவரை 4,40,000 டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் 927 ஷோக்கள் போடப்பட இருக்கும் நிலையில் இதுவரை 900 காட்சிகள் ஹவுஸ் புல் என்றும் கூறப்படுகிறது. நாளை காலை 11 மணிக்கு மேல் முதல் ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது. கோட் மற்றும் லியோ வசூலை விடாமுயற்சி அடிக்கும் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags:    

Similar News