மீண்டும் ஓர் ரோஜாக்கூட்டமா? கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் டிரெய்லர் எப்படி இருக்கு?

By :  Sankaran
Update:2025-03-11 07:37 IST

ஸ்வீட் ஹார்ட், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் என்ற இரு படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றன. இவற்றில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். இந்தப் படத்தை கே.ரங்கராஜ் இயக்கி உள்ளார்.

உயிரே உனக்காக இயக்குனர்: இவர் யார் தெரியுமா? உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர். இவர்தான் இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், பூஜிதா, பரதன், நிமி இமானுவேல், பார்கவ், நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்தி வீரன் சுஜாதா, சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

பணம் மட்டுமே முக்கியமல்ல: ஒருத்தரோட வாழ்க்கையில பணம் மட்டுமே முக்கியமல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன என்பதை எடுத்துச் சொல்கிறது படம். கிளைமாக்ஸ் காட்சியில் கிளைடரைப் பயன்படுத்தினார்களாம். அதைப் பார்க்கவே பிரம்மாண்டமாகவும், திரில்லாகவும் இருக்குமாம். சென்னை, கொடைக்கானலில் இந்தப் படத்துக்கான சூட்டிங் நடைபெற்றுள்ளது.

டிரெய்லர்: இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் இயக்குனரோ சூப்பர்ஹிட் காதல் படத்தைக் கொடுத்தவர். ஸ்ரீகாந்துக்கோ காதல் படங்களில் ரோஜாக்கூட்டம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த வகையில் இந்தப் படமும் மீண்டும் ஓர் ரோஜாக்கூட்டம் ஆகுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆன்டி ஹீரோ: டிரெய்லர்ல 'நம்மால உழைச்சி கார், பங்களா எல்லாம் வாங்க முடியுமா? கொலை, கொள்ளைல உனக்கும் பங்குண்டு'ன்னு ஸ்ரீகாந்த் சொல்வதைப் பார்த்தால் இவர் ஒரு ஆன்டி ஹீரோவாக இருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதே போல படத்தின் நாயகி ஒரு கோடீஸ்வரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து உன் முன்னால நிற்கலன்னு சபதம் விடுகிறார். படத்தில் மறைந்த கலைஞர் டெல்லிகணேஷ் நடித்து இருக்கிறார். கே.ஆர்.விஜயாவையும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்க முடிகிறது.

Tags:    

Similar News