விஜய்சேதுபதிக்கு பதில் பிரதீப் ரெங்கநாதனா? கொஞ்சம் கூட மேச் ஆகலயே..
sethu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய்சேதுபதி தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஆரம்பத்தில் நகைச்சுவை மிக்க கதாபாத்திரங்களில் அதுவும் ஹீரோவாகவும் நடித்து தவிர்க்க முடியாத நடிகராக மாறி வந்தார்.
சேதுபதி படம் தான் அவரை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அந்தப் படத்திற்கு பிறகு இப்படியொரு கணவன் நமக்கு கிடைக்கமாட்டானா என்று பெண்களும் ஏங்கினார்கள். சொல்லப்போனால் பெண் ரசிகைகளின் உள்ளம் கவர்ந்த ஹீரோவாக மாறியது சேதுபதி படத்திற்கு பிறகுதான். எல்லாரிடமும் சகஜமாக பழகுவார். ஏற்றத்தாழ்வு அந்த பாகுபாடு இல்லாமல் பழகக்கூடிய நடிகர் விஜய்சேதுபதி.
எப்படி சேதுபதி படத்தில் நல்ல கணவனாக பார்க்கப்பட்டாரோ அதை போல் 96 படத்திற்கு பிறகு இப்படியொரு காதலன் கிடைக்கமாட்டானா என்று ஏங்கவைத்தார். இத்தனைக்கும் அந்தப் படத்தில் தாடியுடன் நரைமுடியுடன் தான் இருப்பார். இருந்தாலும் அவர் நடிப்பு காதலுடன் அவர் பார்க்கும் ஏக்கமான பார்வை என அனைவரையும் உரைய வைத்தார் விஜய்சேதுபதி.
அந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். படத்தை பிரேம் இயக்கினார். இந்த நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. அதை ஐசரி கணேஷ்தான் தயாரிப்பதாக இருந்தார். சமீபத்தில்தான் அந்தப் படத்தின் கதையை விஜய்சேதுபதி கேட்டாராம். அதில் அவருக்கு உடன்பாடு இல்லையாம்.
96
சிங்கப்பூரில் இருக்கும் திரிஷாவை தேடி போவது மாதிரியான கதையாம். விஜய்சேதுபதிக்கு உடன்பாடு இல்லாததால் அதற்கு பதில் பிரதீப் ரெங்க நாதனை முயற்சித்திருக்கிறார்கள். பிரதீப்புக்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாம். ஆனால் ரக்டு பாயாகவே என்னை பார்த்த மக்கள் இப்படியொரு கேரக்டரில் பார்த்து ரசிக்கமாட்டார்கள் என சொல்லிவிட்டாராம். அதனால் 96 படத்தின் இரண்டாம் பாகத்தில் வேறு எந்த ஹீரோ நடிக்க போகிறார் என்பது தெரியவில்லை.