அப்பா பாடலை யூஸ் பண்ண இவருக்கும் ரைட்ஸா? ‘படைத்தலைவனா’ இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னுதான்

By :  ROHINI
Published On 2025-05-18 12:49 IST   |   Updated On 2025-05-18 12:49:00 IST

padaithalaivan

சமீபகாலமாக காப்பி ரைட்ஸ் என்ற பிரச்னை சினிமாவில் வைரலாகி வருகின்றது. அதுவும் இளையராஜா தன்னுடைய பாடலை தன் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என அதை மீறி பயன்படுத்துபவர்கள் மீது காப்பி ரைட்ஸ் அடிப்படையில் புகார்களை கொடுத்து வருகின்றார். சமீபத்தில் கூட குட் பேட் அக்லி படத்தில் நான்கு பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா பட தயாரிப்பு நிறுவனம் மீது புகார் அளித்தார்.

இந்த நிலையில் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்திலும் விஜயகாந்த் நடித்த பொட்டு வச்ச தங்க குடம் பாடலை பயன்படுத்தியிருக்கிறார்கள்.ஏற்கனவே இந்த பாடலை லப்பர் பந்து படத்தில் பயன்படுத்தினார்கள். இதைப் பற்றி படைத்தலைவன் பட இயக்குனரிடம் கேட்ட போது ‘லப்பர் பந்து படத்தில் பயன்படுத்தியது எங்களுக்கு தெரியாது’

‘முதலிலேயே இந்தப் பாடலின் ரைட்ஸை நான் தான் வாங்கி வச்சிருந்தேன். இப்பவும் என்கிட்டதான் இருக்கு. இளையராஜாவை பொறுத்தவரைக்கும் பழைய பாடலை படத்தில் பயன்படுத்துவது பிடிக்காது. அதனால் படைத்தலைவன் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் அந்த பாடலை சேர்த்து எடிட் எல்லாம் செய்து என்னுடைய உதவியாளரிடம் கொடுத்து இளையராஜாவை பார்க்க சொன்னேன்’

‘அவரும் பார்த்து பிரம்மாதமாக இருக்கிறது. நன்றாக வந்திருக்கிறதே என கூறினார். ஆனால் இளையராஜா இப்படி சொல்லுவாருனு நினைக்கவில்லை’ என படைத்தலைவன் படத்தின் இயக்குனர் கூறினார். படைத்தலைவன் படத்திற்கும் இசை இளையராஜாதான். மேலும் இந்தப் படத்தின் போஸ்டரில் சண்முகப்பாண்டியன் யானைகளுக்கு நடுவே இருப்பது போல வைத்திருக்கிறார்கள்.

padaithalaivan

இதை பற்றி சண்முகப்பாண்டியன் கூறும் போது அழகர் படத்தில் ஏற்கனவே விஜயகாந்த் யானையின் மீது ஏறி அமர்ந்து போவது போல காட்சி இருக்கும். இந்தப் படத்தில் நான் யானைகளுடன் நடிக்கும் போது என்னுடைய அப்பா சில அறிவுரைகளை கூறினார். யானையுடன் நடிக்கிற மாதிரி இருந்தால் அந்த யானைக்கு பாகன் உணவளிக்க கூடாது. நீதான் யானைக்கு எல்லாம் இருந்து பார்க்கணும். யானையுடன் பழகணும். அப்போதுதான் படத்தில் உனக்கேற்ற மாதிரி யானையும் நடிக்கும் என சண்முக பாண்டியன் கூறினார்.

Tags:    

Similar News