கிரிக்கெட் தெரியாம சிஎஸ்கே அம்பாஸிடரா? விஜய் பல்ப் வாங்கிய சம்பவத்தை பகிர்ந்த பிரபலம்!..
ஐபிஎல் சென்னை அணி அம்பாசிடர் விஜய் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
Vijay: நடிகர் விஜய் சிஎஸ்கேவின் பிராண்ட் அம்பாஸிடர் என்பது பலருக்கு தெரியும். ஆனால் அவருக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்பது பலருக்கு தெரியாத புதிய விஷயம் தான். இது குறித்து பிரபலம் ஒருவர் கூறியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். நடிப்பில் கெட்டி. டான்ஸில் பட்டையை கிளப்பி வரும் விஜய் பெரும்பாலும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது இல்லை. அப்படி அவர் குறித்து வெளி வீடியோக்கள் பதிவுகள் வெளியானால் கூட அதில் வேறு எதிலும் கலந்து கொண்டதில்லை.
வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் பிரபலங்கள் இணைந்து கிரிக்கெட் விளையாடிய போது கூட விஜய் அங்கு அம்பயராக தான் நின்றிருப்பார். விஜய்யின் விளையாடவில்லை என பலர் அப்போதே கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் அதற்கு அப்போது பலரிடம் பதில் இல்லை.
இந்நிலையில் நடிகர் ஜீவா பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் இதற்கெல்லாம் பதிலாக அமைந்துள்ளது. விஜய் பிரபலங்கள் ஆடும் சிசிஎல்லில் எப்படி ஆர்வம் காட்டுவார். அவருடன் கிரிக்கெட் விளையாடிய எந்த அனுபவமாவது இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், ஒருமுறை ஐபிஎல்லை நேரில் பார்க்க எல்லோரும் சென்றிருந்தோம்.
அப்பொழுது பந்து பௌண்டரிக்கு சென்றது. அதை பார்த்து அருகில் இருந்த விஜய் என்னிடம் சார் இது போரா சிக்ஸா எனக் கேள்வி எழுப்பினார். நான் ஷாக் ஆகி சார் அது 4 தான். நீங்க தான் சிஎஸ்கேவின் பிராண்ட் அம்பாஸிடர் அதை மறந்திடாதீங்க எனக் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
கிரிக்கெட் விளையாட தெரியாத போதும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அழைத்தபோது விருந்தினராக வந்து இரண்டு சீசன்களை சிறப்பித்தார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜீவா பேட்டியைக் காண: https://x.com/TrollywoodX/status/1839903207331684436