வேட்டையன் ஒரிஜினல் பான் இண்டியா படமா? ஆனா தரமான சம்பவம் இருக்காம்..!

அப்போ பான் இண்டியா படம்கறது எல்லாம் சும்மா ஃபீலாவா?

By :  sankaran
Update: 2024-09-22 08:00 GMT

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத்பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ள படம் வேட்டையன். அனிருத் இசையில் பாடல்கள் தெறிக்க விடுகின்றன. படத்திற்கான ரிலிஸ் தேதி நெருங்குவதால் ஹைப் அதிகரித்துள்ளது. இந்தப் படம் பான் இண்டியா மூவியா என பிரபல பத்திரிகையாளர் சுபைர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்ல உள்ள இயக்குனர்கள் வேற்று மொழில இல்லாத நடிகர்களை வைத்து பான் இண்டியா மூவி பண்ண முடியுமா? கோட், காந்தாரா, கேஜிஎப் மாதிரி. சிவராஜ்குமார், பகத்பாசில், அமிதாப்பச்சன் அப்படின்னு வேற்று மொழி நடிகர்கள் இல்லாம இருக்கணும். அதே மாதிரி உங்களால ஏன் பண்ண முடியலைன்னு ஒரு சினிமா விமர்சகர் டுவிட்டர்ல கேட்டுருக்காரு. இதுக்கு உங்க பதில் என்னன்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு சுபைர் சொன்ன பதில் இது தான்.


நல்ல கேள்வி தான். அதுக்காக கோட் என்ன பான் இண்டியா மூவியா? அது கிடையாது. கன்னடத்துலயும் பெரிசா போகல. பான் இண்டியா மூவிங்கறது ஒரிஜினலா இதுவரைக்கும் தமிழ்ல இல்லை. அது சௌத் இண்டியன் மூவியாத்தான் இருக்குது. இதுவரைக்கும் எந்தப் படமும் பான் இண்டியா மூவியாக வரல. பாகுபலியே பான் இண்டியா மூவி கிடையாது.

நல்ல வசூல் கொடுத்தது. ஆனா அது சௌத் இண்டியால தான் நல்லா வசூலித்தது. ஒரிஜினல் பான் இண்டியா மூவின்னா தமிழ்ல ஒரு படம் எடுத்தா அதை அப்படியே வந்து மும்பை, கொல்கத்தா, பீகார்லயோ, உபிலயோ பார்த்தா தான் அது பான் இண்டியா மூவி. ஜெய்லர் படமும் அந்த வகையில் சேராது. மும்பைல எங்கேயோ ஒரு தியேட்டர்ல காலை 10 மணி காட்சி ஓடுது. அதுக்காக அது பான் இண்டியா மூவியா? பான் இண்டியா மூவின்னா எல்லா இடங்களிலும் அந்தப் படத்தைக் கொண்டாடணும்.

ஹம் ஆப் கே கெய்ன் கவுன் வந்தது. ஜவான் வந்தது. எல்லாப் பக்கமும் ஓடுச்சு. கலெக்ஷன் கொடுத்துச்சு. அது தான் ஒரிஜினல் பான் இண்டியா மூவி. இந்திப்படமே இப்போ பெரிசாப் போகல. ஒரு காலத்துல கான் நடிகர்களின் ஆதிக்கம் தான் பெரிசா இருந்தது.

ஹம் ஆப் கே கெய்ன் கவுன் படமே சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர்ல இந்தியிலேயே ஒரு வருஷம் ஓடுச்சு. தமிழ்ல இதுவரைக்கும் எந்த ஒரு படமும் பான் இண்டியா மூவி இல்லை. வேட்டையன் அமிதாப் இருக்கறதால பான் இண்டியா மூவியா வர டிரை பண்றாங்க. அது எந்த அளவுக்கு ஒர்க் அவுட்டாகும்னு தெரியல.

அமிதாப்பச்சன், பகத்பாசில், ராணா டகுபதி எல்லாரும் கதைக்கு அவசியம் தேவைப்பட்ட கேரக்டர்கள். அப்புறம் பெரிய நடிகர்களைப் போடும்போது கலெக்ஷனும் நல்லாருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News