மகனாக நினைக்கும் ஜெயம் ரவிக்கு வேண்டுகோள்.. வேதனையில் அறிக்கையை வெளியிட்ட மாமியார்
jayamravi
ஜெயம் ரவியால் நான் கடன் காரியாகிவிட்டேன் என தற்போது அவருடைய மாமியார் சுஜாதா தெரிவித்திருக்கிறார். அந்த செய்தி தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் .2009 இல் இருந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றனர்.
இந்த 16 வருட வாழ்க்கையை இப்போது நான் முடித்துக் கொள்ள போவதாக ஜெயம் ரவி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். அதற்கு காரணம் என்னை சுதந்திரமாக வாழ விடவில்லை என்றும் மனைவி என்னை சந்தேகிக்கிறார் என்றும் பல குற்றச்சாட்டுகளை அவர் மீது வைத்திருக்கிறார் .ஆனால் ஆர்த்தி அப்படி எதுவும் இல்லை என ஆரம்பத்தில் சொல்லி வந்த நிலையில் இப்போது ஐசரி கணேஷ் இல்ல திருமணத்தில் ஜெயம் ரவியும் கெனிஷாவும் ஒன்றாக வந்ததை பார்த்ததும் இனிமேல் நான் அமைதியாக இருக்க மாட்டேன் என் மகன்களுக்காக போராட போகிறேன் எனக் கூறியிருக்கிறார் ஆர்த்தி.
ஆர்த்தியின் இந்த அறிக்கைக்கு தன்னுடைய பதில் அறிக்கையையும் தெரிவித்து இருந்தார் ஜெயம் ரவி. இந்த நிலையில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா ஒரு பதிவில் கூறி இருப்பது என்னவெனில் என் மாப்பிள்ளையை வைத்து அடங்க மறு, சைரன், பூமி போன்ற படங்களை தயாரித்தேன். அந்த படங்களுக்காக பைனான்சியர்களிடமிருந்து 100 கோடி கடன் வாங்கி இருக்கிறேன்.
அதில் ஜெயம் ரவிக்கு 25% ஊதியமாக வழங்கிவிட்டேன். அதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அந்த படங்களின் வெளியீட்டின் போது ஜெயம் ரவியை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இப்போதும் என் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவிக்கு ஒரு வேண்டுகோள். எப்பொழுதும் உங்களை நாங்கள் ஒரு கதாநாயகனாகவே பார்க்கிறோம். ரசிக்கிறோம். நடந்து வரும் பிரச்னையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து தரம் தாழ்த்தி விடுகிறது.
நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும். இது நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று அழைக்கும் அந்த அம்மாவின் ஆசை. என்னுடைய பேரக் குழந்தைகளுக்காக என் மகளும் நீங்களும் சந்தோஷமாக வாழவேண்டும் என விரும்புகிறேன். அழகாக வாழ்ந்த மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்குதான் தெரியும்.
ஊடக நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை என சுஜாதா ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார்.