1500 கோடி கன்பார்ம்!.. அட்லி - அல்லு அர்ஜூன் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள்!..
AA26: ஷங்கரிடம் சினிமா கற்றவர் அட்லி. எனவே, அவரைப்போலவே அதிக பட்ஜெட்டில் படமெடுத்து தயாரிப்பாளர்களை கதறவிடும் இயக்குனர் இவர். இவர் முதலில் இயக்கிய ராஜா ராணியை தவிர மற்ற படங்கள் எல்லாமே அதிகமான பட்ஜெட்டில் உருவானவைத்தான். விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 படங்களை இயக்கினார்.
இந்த 3 படங்களுமே விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாக இருக்கிறது. இந்த படங்களுக்கு பின் பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் அட்லியை அழைத்தார். இருவரும் இணைந்து உருவானது ஜவான் திரைப்படம். இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே என பலரும் நடித்திருந்தனர்.
இந்த வட மாநிலங்களில் சூப்பர் ஹிட் அடித்து 1300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. எனவே, பாலிவுட் நடிகர்களான சல்மான்கான் போன்றவர்களே அட்லி இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார்கள். அதன்பின் சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் அட்லி ஈடுபட்டார். மேலும் அதில் ரஜினி, கமல் இவர்களில் ஒருவரை கேமியோ வேடத்தில் நடிக்க வைக்கவும் முயற்சி செய்தார்.
ஆனால், அது நடக்கவில்லை. எனவே, அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்க துவங்கிவிட்டார். புஷ்பா, புஷ்பா 2 ஆகிய மெகா ஹிட் படங்களுக்கு பின் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் இது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடம் பேசி வருகிறார்களாம். அதோடு, ராக் என சொல்லப்படும் டயான் ஜான்சனிடமும் பேசி வருகிறார்களாம். இவர்கள் இருவரும் இப்படத்தில் நடித்தால் கண்டிப்பாக இப்படம் 1500 கோடி வசூலை தாண்டி விடும் என்றே கணிக்கலாம்.